தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த காங்கிரஸ், திமுக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் புதுச்சேரியிலும் வேலைநிறுத்தம் தொடங்கியது. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. அரசு பஸ்வண்டிகள் சொற்ப எண்ணிக்கையில்தான் ஓடுகின்றன.