கொழும்பு, பேரவாவி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்காக தெமட்டகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூர்த்தியாகவுள்ளது.
1000 வீடுகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த வீடமைப்புத் திட்டத்தினன் முதற்கட்டமாக 320 வீடுகளை நிர்மாணிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்றுக் காலை தெமட்டகொட பகுதிக்கு விஜயம் செய்து வீடமைப்புத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.
இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டை நிர்மாணிக்க 30 இலட்சம் ரூபாவும் வீட்டை நிர்மாணிப்பதற்கான காணிக்கு 15 இலட்சம் ரூபாவும் செலவிடப்படவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.