ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா வந்துள்ளதாக இந்திய இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் தீவிர எதிர்ப்பலை கிளம்பியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான நிலவரம் மற்றும் யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்களது பாதுகாப்பு குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.