2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 173,444 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடைய பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 151,343 ஆகவும், பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடைய தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 22,101 ஆகவும் உள்ளது.அதன்படி பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடைய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 173,444 ஆகவும் இது 64.33 சதவீதமாகும். பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 229,057, பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எண்ணிக்கை 40,556. அதன்படி பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 2,69,613 ஆகும். நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடைய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 173,444 ஆக பதிவாகியுள்ளது.
பெறுபேறு நிறுத்தப்பட்ட பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 146 ஆகவும் பெறுபேறு நிறுத்தப்பட்ட தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 44 ஆவதுடன் பெறுபேறு நிறுத்தப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 190 ஆகவும் காணப்படுகிறது.
பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். பெறுபேறுகள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள், சகல பாடசாலை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் http://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக தேசிய அடையாள அட்டை எண்ணை உட்செலுத்தி பெறுபேற்று அட்டவணையை (Results Schedule) தரவிறக்கம் செய்து கொள்வதற்கும், பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சகல அதிபர்களுக்கும் http://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றை பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் ((User Name) (Password)) என்பவற்றை பயன்படுத்தி பாடசாலைகளில் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன. சகல மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் (User Name) (Password)) என்பவற்றை பயன்படுத்தி http://onlineexams.gov.lk/onlineapps/index.php/welcome/onlineresults எனும் இணைப்பினூடாக பெறுபேற்றை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். தங்களது மாகாண / வலயத்திலுள்ள சகல பாடசாலைகளினதும் பெறுபேறுகளை பார்வையிடவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். பாடசாலைகளின் பரீட்சை பெறுபேற்று அட்டவணை பாடசாலை அதிபர்களுக்கு மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறு வெளியிடப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்படும். பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக http://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக 2024.06.05 ஆம் திகதி தொடக்கம் 2024.06.19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். மேலதிக விசாரணைகளுக்கு பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புப் பெறுபேற்றுக் கிளை இலக்கங்களாவன 011 2784208, 011 2786616, 011 2784537, 011 2785922, பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டுக்கிளை இலங்களாவன 011 2785231, 011 2785216, 011 2784037, நிகழ்நிலை அலகு இலக்கம் 011 3671568, துரித அழைப்பு இலக்கம் 1911, மின்னஞ்சல் முகவரி gcealexam@gmail.com.