தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – தரும்புரம் வைத்தியசாலை மற்றும் போதைப் பொருள் புணர் வாழ்வு நிலையம் ஆகியவற்றின் நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கோரிக்கைகளை நான் அமைச்சரவையில் கொண்டு சென்று இந்த தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றேன்.
குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை அமைச்சரவையில் முன்வைத்திருந்தேன். அதற்கு ரணில் உறுதிமொழி வழங்கியிருக்கின்றார்.
அதேபோல இந்த வைத்தியசாலையினுடைய தேவைகள் தொடர்பாகவும் நான் அமைச்சரவையில் முன்வைக்க இருக்கின்றேன்.குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளாக இருந்தாலும் சரி இந்த நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவையே சாரும்.
ஆகவே அவருக்குத்தான் எங்களுடைய ஆதரவும் இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.