”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய ‘ரா’ உளவுத்துறை சதித்திட்டம் தீட்டியுள்ளது” என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக் கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய ‘ரா’ உளவுத்துறை சதித் திட்டம் தீட்டியுள்ளது என்று மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.
போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகியிருக்கிறது. கடந்த காலத்திலும் பல முறை பிரபாகரனை ஒழித்துவிட ‘ரா’ உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித் திட்டத்தை விடுதலைப்புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே இச்சதியில் ஈடுபட்டுள்ள ‘ரா’ அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும். இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று அந்த அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
palli
ஜயா தாங்கள் இந்திய அரசை விடுதலை (தறுதலை) புலிகளுக்காக எச்செரிக்கை செய்தது எத்தனை தடவை என்பதை கணக்கிட்டால் எச்செரிக்கை மன்னன் பட்டமும் சாத்னையாளர் பட்டியலில் ஒரு ஓரத்திலாவது இடமும் கிடைத்திருக்குமே.
chandran.raja
உங்களுக்கு புத்தி சொல்ல எங்களுக்கு தகுதியில்லை. அதில் நேரத்தை செலவழிப்பதற்கும் நாம் விரும்பில்லை. ஒன்றை மட்டும் உங்களுக்கு சொல்லுகிறோம். பிரபாகரனை கொல்வதற்கு “றோ” தேவையில்லை. அவசியமும் இல்லை. இன்றைய நிலையில் வன்னியில் முடமாக்கப்பட்டவர்களே! போதுமானவர்கள். அவர்களுக்கு முறையான ஊன்றுகோல் இருக்கிறதோ இல்லையோ அவர்களின் மனநிலை அறம்பாடியோ பிரபாகரனின் உடலை சுட்டெரிக்க போதுமானவை.
பார்த்திபன்
நெடுமாறன் ஐயா தாங்கள் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்தவர் என்பது என் போன்றவர்களுக்கு முன்பு தெரியும். ஆனால் என்று புலிகளுக்கு வக்காலத்து வாங்கத் தொடங்கினீர்களோ, அன்று உங்க நேர்மையும் கேள்விக் குறியாகிவிட்டது. இதற்கு ஆதாரம் சேர்ப்பது போல் சில வாரங்களுக்கு முன் பிரித்தானிய வானொலியொன்றில் இந்தியாவிலிருந்து இந்தியச் செய்திகளை வழங்கும் நிருபர் ஒருவர் தங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, தாங்கள் எம்பியாகவோ எம்எல்லேயாகவோ இல்லாமல் வேறு எந்த வித வருமானமும் இல்லாமல், உங்கள் பிள்ளைகள் அனைவரும் எப்படி அவுஸ்ரேலியாவில் கல்வி கற்கின்றார்கள் என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் நிறையவே உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தச் சந்தேகத்தை நீங்கள் தான் தெளிவாக்கணும்.