யாழ் – குருநகரில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது ஜவர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
பொசன் தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவரும், கஞ்சா கலந்த மாவாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது 19 மதுபான போத்தல்கள், 70 மில்லிகிராம் ஹெரோயின், 80 கிராம் கஞ்சா கலந்த மாவா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன