கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ !

குற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் கைத்தொழில் கண்காட்சியுடன் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை என தெரிவித்த அமைச்சர், அதனை அடிப்படை விடயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் நான்கில் ஒரு பகுதி மக்கள் நிகர நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *