சரணடையும் நிலையில் பானு உட்பட முக்கிய தலைவர்கள்?

brig_shavendra.jpgகேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோர் மக்களோடு மக்களாக புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியிலேயே இன்னமும் உள்ளனர் என்பது தயா மாஸ்டரின் வாக்குமூலம் ஊடாக ஊர்ஜிதமாகியிருக்கிறது என்றும் பிரிகேடியர் சவேந்திர டி சில்வா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுமாத்தளனிலுள்ள 58ஆவது கட்ட ளையிடும் தளபதியின் அலுவலகத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே பிரிகேடியர் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

படையினரிடம் சரணடைந்த புலிகளின் ஊடகப் பேச்சளரான தயா மாஸ்டர் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக புலிகளின் தலைமையின் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் அழுத்தம் காரணமாக தமது வாழ் நாளில் பொய்பேச வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப் பட்டதாகவும் இதனால் தாம் மிகவும் மனம் வருந்து வதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் மட்டுமல்ல அவரது புதல்வர் சார்ள்ஸ் அன்டனியும் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறிய தயா மாஸ்டர் இறுதி நேரத்தில் பிரபாகரன் தப்பிச் சென்றுவிடுவார். போராட்டத்தில் இறுதிவரை நின்று உயிரிழக்க மாட்டார்; அவர் இவ் வாறான மனப்பான்மையை கொண்டவர் என்றும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.

இதேவேளை, பிரபாகரன் இறுதிநேரத்தில் தப்பிச் செல்வதற்காக இன்னுமொரு நீர்மூழ்கியை வைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள புதுமாத்தளன் பகுதியின் தென்முனைப் பகுதியிலிருந்து எதிர்முனைக்கு கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்முனையினூடாக மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதாலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறிய பிரிகேடியர் சவேந்திர சில்வா, எனினும் படையினர் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தியே எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேறும் மக்களின் நலன் கருதியே இவ்வாறு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரிகேடியர் கூறினார்.

புலிகள் அனைவரும் இறுதி வரை போராட வேண்டும் என்றும் அனைவரும் சிவில் உடையில் நின்றே போராட வேண்டும் என்றும் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • mano
    mano

    தமிழீழத்தில் புலிக்கொடியை ஏற்றிவிட்டுத் தான் அவர் தப்பி ஓடுவார். ஒருவருக்கும் தெரியாத மறைவிடத்தில் தனது மகனுடன் தங்கியுள்ள பிரபாகரன் அங்குள்ள மக்கள் தப்பிஓடி மிகுதிப்பேர் இறந்தும் புலிகளும் இறந்து கடைசிநபர் இறந்ததும்> இறந்தவர்களைக் குவித்து எரியூட்டுவார் அதில் புலிக்கொடியை ஏற்றுவார். 4 பேர் மட்டும் செல்லக்கூடிய அந்த நீர்மூழ்கிக் கப்பலில் பொட்டம்மான்> சூசை தன் மகனுடன் ஏறித் தப்பிச் சென்றுவிடுவார். அவருக்கு தற்போதைக்கு மிகவும் நம்பிக்கையான நபர் மகன் மட்டுமே. இப்படித்தான் தயா மாஸ்டர் நினைப்பார். ஆனால் வெளியே சொல்லமாட்டார்.

    Reply
  • மாயா
    மாயா

    2006ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி , அதாவது சரியாக இன்றைக்கு 3 வருடங்களுக்கு முன் 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆண்ட போது பிரபாகரன், சரத் பொண்சேகாவை கொலை செய்வதற்காக ஒரு தற்கொலைதாரியை அனுப்பினார். இன்று பிரபாகரனை 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் இராணுவம் முடக்கி விட்டது. இதுதான் எல்லாம் தெரிந்த தலைவரின் தீர்க்க தரிசனம்.

    இப்படியான மிக பரிதாபமான நிலையில் மனோ சொல்வது போல சுடுகாட்டில் புலிகளின் தேசியக் கொடியை தலைவர் பிரபாகரன் ஏற்றுவார் போலத்தான் தெரிகிறது.புலம் பெயர் நாடுகளில் படங்களுக்கு முன்னால் ஆதரவாளர்கள் புலிக் கொடியை ஏற்றி தீக்குளித்து மாவீரர் ஆவார்கள்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பிரபாகரன் புலிக்கொடியையும் பங்கருக்குள் தான் ஏற்றுவார். வெளியில் வந்து கொடியேற்ற நினைத்தால் அவருக்கு இராணுவம் மலர்வளையம் அல்லவா சாத்திவிடும்.

    Reply
  • மாயா
    மாயா

    இராணுவ பிரதேசத்துக்கு வந்துள்ளவர்களது தகவல்களில் இருந்து புலிகளை எதிர்போரை முதலில் கண்டித்து மட்டை அடி கொடுத்து பார்த்தும் முடியாத நேரத்தில் அவர்கள் திரும்பிச் செல்வதாகவும் பின்னர் அந்த அப்பாவிகள் வாழும் கூடாரத்தை நோக்கி எறிகணைத் தாக்குதல் நடத்திவிட்டு இராணுவம் தாக்கியதாக புலிகள் அறிவிப்பதாகவும் ஒருவர் தன் குழந்தையின் தலையில் கைவைத்து சத்தியமாக உண்மை என்றுள்ளார். மக்கள் சாகிறார்களே என்றால்? ஆக்கள் செத்தால்தான் நாடு கிடைக்கும் என்பார்களாம்?

    நான் வன்னி சென்ற போது ஒரு முக்கிய புலிப் போராளி என்னிடம் சொன்னார். “நாடும் வேணும், ஆக்களும் சாகக் கூடாது என்றால் எப்பிடியண்ண ” என்று. நான் அதற்கு எதுவும் சொல்லல்ல. தெரியும்தானே?……. இப்போது அவர்களது தியரி புரிகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாயா; சற்று முன் எனது நண்பரொருவர் கனடாவிலிருந்து தொலைபேசியில் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த போது, தற்போதைய நாட்டு நிலைமை பற்றிய கதையும் அப்போது வந்தது. அப்போ நண்பர் சொன்னார் கனடா வானொலிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் இராணுவத்தின் அட்டூழியங்களை புட்டுப் புட்டு வைக்கின்றார்கள் என்று. என்ன அட்டகாசமென்று கேட்டபோது, நண்பர் சொன்னார் தற்போது இராணுவம் புலிகள் எங்கெங்கெல்லாம் கண்ணிவெடிகளைப் புதைத்திருக்கின்றதோ அந்த இடங்களையே பொதுமக்கள் வெளியேற வழியமைத்துக் கொடுத்து அதன் மூலம் மக்களுக்கு உயிரிழப்புகளையும், அங்க இழப்புகளையும் திட்டமிட்டே ஏற்படுத்துகின்றார்களாம். இக் கதைகளை நீ நம்புகின்றாயா என்று கேட்டபோது அவர் சொன்னார் உண்மையென்ற படியால்த் தானே திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள் என்று. சரி நான் ஒன்று கேட்கின்றேன் பதில் சொல் எப்படி புலிகளுடன் கூட இருந்த மக்களுக்கே புலிகள் கண்ணிவெடி தாட்ட இடங்கள் தெரியாத போது, இராணுவத்திற்கு எப்படி புலிகள் கண்ணிவெடி தாட்ட இடங்கள் தெரிந்திருக்கும் என்று கொஞ்சமாவது யோசித்தாயா?? அப்போது தான் அவரும் யோசித்துவிட்டு சொன்னார் நீ கேட்பதும் நியாயமான கேள்வி தான் உதை நானும் யோசிக்கவில்லைத் தானென்று.

    உண்மையில் இது ஒரு உதாரணம். ஆனால் இப்படி எத்தனையோ பேர் நம் மத்தியிலும் வாழ்வதால்த் தான் புலிகளும் புலி வாலுகளும் தாம் நினைப்பதை இலகுவாகச் சாதிக்க இப்படி முட்டாள்களையே கருவியாக்குகின்றார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இவர்கள் தப்பிப்போனாலும் இவர்களை வாழ உலகம் அனுமதிக்கப்போவதில்லை. முக்கிய தலைகள் சரணடைய மாட்டார்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஒரு வசதியுள்ள ஐரோப்பியன் அனுபவிப்புகள் எல்லாவற்றையும் பின்தங்கிய வன்னிப் பிரதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் அனுபவித்துவிட்டு; பல்லாயிரக்கணக்கான கோடிசொத்துக்களின் அழிவுக்கு காரணமாக இருந்ததும்மல்லாமல் 13-வயதில்லிருந்து 30 வயதான வரை காவு கொடுத்து இது தான் புலிகளின் சீதனம் என்று சொல்லி……..
    சயினட்டை கடிப்பார்களா? சொக்கப்பானையை கொழுத்தி அதற்குள் அடக்கலம் தேடி புகுந்துகொள்வார்களா? என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.

    Reply
  • Rohan
    Rohan

    //சரி நான் ஒன்று கேட்கின்றேன் பதில் சொல் எப்படி புலிகளுடன் கூட இருந்த மக்களுக்கே புலிகள் கண்ணிவெடி தாட்ட இடங்கள் தெரியாத போது, இராணுவத்திற்கு எப்படி புலிகள் கண்ணிவெடி தாட்ட இடங்கள் தெரிந்திருக்கும் என்று கொஞ்சமாவது யோசித்தாயா?? அப்போது தான் அவரும் யோசித்துவிட்டு சொன்னார் நீ கேட்பதும் நியாயமான கேள்வி தான் உதை நானும் யோசிக்கவில்லைத் தானென்று. – பார்த்திபன்//

    சுவாரசியமான் லொஜிக்.

    இராணுவத்துக்கு புலி கண்ணி வெடி பதித்த இடங்கள் தெரியாமல் இருந்தால், மக்களை அந்த வழியால் அனுப்பி கண்ணி வெடி உள்ளதா என்று பரீட்சித்துப் பார்க்க வாய்ப்பு ஒன்று நிச்சயம் இருக்கிறது. இந்த கண்ணி வெடி டிரெக்ரர் வைத்து தடவிக் கொண்டிருப்பதை விட சில தமிழ் உயிர்கள் ஒரு இலகுவான விலை.

    புத்தர் வழி வந்த விழுமியமிக்க இராணுவம் அல்லது போர்க் குற்றங்களுக்குப் பயந்த இராணுவம் என்று பார்த்தால் அவர்கள் செய்யாமல் விடலாம். ஆனால் குண்டு சத்தம் கேட்டாலே கண்டபடி சுடும் வீரர்கள் கொண்டது இலங்கைப் படை.

    கனடா வானொலிகளுக்கு நான் ஒன்றும் முட்டுக் கொடுக்க வரவில்லை. புலியின் கிறெடிபிலிற்றி எல்லாம் உலகு அறிந்த விஷயம். ஆனால் அவர்கள் ப்ண்ணுகிற பிரசாரத்துக்கு இப்படி ஒரு லொஜிக்கல் பதிலையா தரவேண்டும்?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ரோகன் சுருக்கமாக எதாவது நான் கூறுவதாக இருந்தால் இதைதான் நான் உங்களுக்கும் உங்களைப்போல் உள்ள பல ரோகன்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். தமிழ் இனத்தைப்போல் கேடுகெட்டதனமாக சிங்களஇனம் என்றும் இருந்ததில்லை.

    Reply
  • suban
    suban

    நண்பர் றோகன்- வாதங்கள் புரிந்து வெற்றிதோல்வியில் என்ன கண்டோம்?
    புலியினுடைய தவறுகளை சுட்டுவதால் ஒருவர் அரசஆதரவாளராகிவிடமுடியாது. இவ்வாறே மற்றவரும்.

    அரசு இனவாதஅரசு கொடிய அரசுச என்றுதானே போர்க்கொடி தூக்கினோம்?. புலிகளின் கடந்த காலதவறுகளை கூட விடுவோம். மாற்றுக்கருத்தாளர் துரோகிகளாகவே விடுவோம். அந்த வன்னி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அரசுக்கு மக்கள் மேல் இருக்கும் கரிசனையைவிட புலிக்கு அதிகம் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?

    புலம் பெயர்சூழலில் தமிழர்களை பாருங்கள்! எவ்வளவு வெறுவாய் சப்பிகளாக இருக்கிறார்கள்? எவ்வளவு ஏமாளியாக இருக்கிறார்கள். வெண்டிக்காய்க்குள் பாம்பைக்கொண்டு திரிந்தவர்கள் இப்போ தமிழ் பெண்களின் யோனிக்குள் அரைலீற்றர் விந்து என்று நேற்று ஒருவர் வானொலியில் கதையாடுகிறார். தொலைக்காட்சியில் ஒரு கிழவி கூசாமல் சொலகிறா படுத்திருந்த புருசனைக் கலைத்துவிட்டு இராணுவம் கலவி செய்கிறானாம். இவையெல்லாம் இராணுவம் செய்யமாட்டாது என்று நான் கூறவரவில்லை. ஆனால் இவர்களெல்லாம் உசுப்பேத்துறத்துகாக வெண்டிக்காயக்குள் பாம்பை கொண்டு திரிகிறார்கள். தங்கள் பிள்ளைகள் பெண்டிர்கள் கற்போடு இருக்கிறார்கள் என்ற திமிரில் தானே இப்படிக் கதைக்கிறார்கள்.

    இளைஞர் சக்தி மாணவர் எழுச்சி என்று வானொலிகளில் அன்பு பொங்க அவர்களை கட்டித்தழுவி கற்பூரமாய் கரைகிறார்கள். உந்த ஒருபகுதி அப்பாவி மாணவர்களை லும்பன்களுக்குள் கரைத்து பாழடிப்பதை நீங்கள் உணரவில்லையா? சிறுசுகளில் வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். ரிவி வானொலிகளைக் கேளுங்கள் தமிழ் சமூகம் எங்கே நிற்கிறது என்பது உங்களுக்கு புரியும். புலிகளையும் உந்த மக்கள்கூட்டத்தையும் முதலில் கண்டியுங்கள். சேர்த்து இவற்றையும் கண்டியுங்கள். உங்கள் குரலுக்கு வலுவிருக்கும். அதற்கு ஒரு சக்தியும் இருக்கும்.

    றோகன் நீஙகள் எழுதுவதால்தான் கருத்துக்களத்திற்கே ஒரு அரத்தம் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இராணுவத்துக்கு புலி கண்ணி வெடி பதித்த இடங்கள் தெரியாமல் இருந்தால், மக்களை அந்த வழியால் அனுப்பி கண்ணி வெடி உள்ளதா என்று பரீட்சித்துப் பார்க்க வாய்ப்பு ஒன்று நிச்சயம் இருக்கிறது.- Rohan //

    யானையைப் பார்த்த குருடனைப் போலுள்ளது தங்கள் கருத்துகள். மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து எப்படி வெளியேறி வருகின்றார்கள் என்ற ஒளிப்பதிவுகள் இணையத்தளங்கள் பலவற்றிலும் வந்துள்ளன. அவற்றைக் கூட தாங்கள் பார்க்கவில்லையா?? கடலுக்கு மறுபுறம் இருக்கும் மக்கள் கடலினூடாக வெளியேறி வந்து கடலிற்கு இந்தப் பக்கமிருக்கம் இராணுவத்திடம் தஞ்சமடைகின்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்கள் புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் மாட்டுப்படுவதற்கு காரணம், புலிகள் கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடங்களை மக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்துள்ளனர். காரணம் அப்படியென்றால்த் தான் பயத்தில் அம்மக்கள் வெளியேறத் தயங்குவார்கள் என்று புலிகள் நம்புகின்றார்கள். ஆனால் மக்கள் அதையும் மீறி வெளியேறும் போது தற்கொலைத் தாக்குதல் நடாத்தி அம்மக்களையே சிதறடிக்கின்றனர். உலகிலேயே தன்மக்களையே தற்கொலைத் தாக்குதல் நடாத்தி சிதறடிக்கும் நரவேட்டையாடிகளாக புலிகளே இன்றிருக்கின்றார்கள். இப்போதாவது புரிகின்றதா யார் கண்ணிவெடிகளை பரீட்சித்துப் பார்க்க மக்களை பலியாக்குகின்றார்கள் என்று, அல்லது தொடர்ந்தும் குருடனாகவே கருத்தெழுதப் போகின்றீர்களா??

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ஓம் றோகண், 1500 சதுர கிலோ மீட்டரில இருந்து 5 சதுர கிலோ மீட்டர் வரை இராணுவம் தமிழனை முன்னால விட்டு பின்னாலதான் வந்தாங்கள். அதனாலதான் நீங்கள் வெடி வைக்காம பின்னால பின்னால வந்தனீங்கள். தமிழன் முன்னால வராமயிருந்தா உங்களுக்கு பின்னடைவே இருந்திருக்காது.அப்படித்தானே?

    Reply