தேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரியொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்திருந்தார்.
அரசாங்க திரைப்படப் பிரிவுடன் இணைந்தாக இது இயங்கும். இதன் இயக்குணநராக பேராசிரியர் தர்மசேன பதிராஜ நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியால் நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை இவருக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா அரச நிதியத்திலிருந்து சம்பளமாக வழங்கப்படும்.