எனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு சில வருடங்கள் வரையில் நான் மிகவும் கொதிப்புடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி. இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளி்த்துள்ள பேட்டி..
எனது தந்தை கொல்லப்பட்டபோது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது நான் கோபமடைந்தேன். அந்தக் கோபம் என்னிடம் சில ஆண்டுகள் வரை இருந்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கூட கோபமாகவே இருந்தது. நான் இளம் வயதினளாக அப்போது இருந்ததால் அந்தக் கோபம் இருந்திருக்கலாம் என நினைக்கிறன். ஆனால் படிப்படியாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டேன். கோபமும் படிப்படியாக குறைந்து போனது.
தமிழ் மக்கள் புத்திசாலிகள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தமிழ் தேசியவாதத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்கான முறை தவறு. ஒரு மனிதராக, இன்னொருவரை கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது பாட்டியும், தந்தையும் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர். அதேபோல எனது தாயும் கொல்லப்படுவாரோ என்று நான் 2004ம் ஆண்டு பயந்தேன்.
அந்த ஆண்டில் நான் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அதே வேகத்தில், எனது சகோதரரின் அறைக்குள் புகுந்து, இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ஆதங்கத்துடன் கூறினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். எனது தாயாரைப் பற்றியோ, சகோதரரின் பாதுகாப்பு பற்றியோ தினசரி நான் கவலைப்படத் தேவையில்லை என்றார் பிரியங்கா.
thamilan
உங்க தந்தையின் படைகள் அமைதிப்படை என்ற போர்வையில் இங்கு வந்து செய்த கூத்துக்கள் உங்களுக்கு தெரியுமா? எங்க தாய் தந்தை சகோதரர்களை கொன்றவர்களை கட்டிப்பிடித்து நட்பு பாராட்டவா முடியும்? ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்ட நாங்கள் ஜேசுபிரான் இல்லை……………………..
palli
தமிலா மெதுவாக பேசும். அண்ணன் நடேசர் அவர்கள் காலடியில் சுறுண்டு படுத்திருக்கிறார். அவரது யாகத்தை கெடுக்காதே நண்பா.
msri
தலைவரே தாங்கள் செய்ததை “ஓர் துன்னபியல் நிகழ்வு” என்றாக்கினார்! தமிலன் பிரியாஙகாவை நோக்கி ஏதோ சொல்கின்றார்! பழையன கழிதலும் புதியன புகதலும்> இது காலத்தின் தேவை!
Kullan
சிறீ சொன்னமாதிரி கழிதலும் புகுதலும் இல்லை. அரசியலில் வெல்வதற்கு காங்கிரசு போடும் நாடகம். வோட்டு வங்கிகள் நிரப்பும் வரைதான் இந்த மை மாலங்கள். பிரியங்காவின் ஒரு தகப்பனாரால் எத்தனை குடும்பங்கள் குலைந்தன? எத்தனை பிள்ளைகள் தகப்பன்மார் இல்லாமல் தவிக்கிறார்கள். அதற்காக பிரியங்காவின் தகப்பனை கொலை செய்தது சரிஎன்று வாதாடவில்லை. இவர்கள் உள்நாட்டுப் பிரச்சனையை மட்டும் பார்த்தால் நல்லது.