உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்நிலையில், வறிய நாடுகளில் சமுதாயத்திற்காக செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக்கூடாது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நிதி மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சகர்களின் மாநாட்டில் பேசிய அவர், செல்வந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு, அது வறுமையை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டார்.