பன்றிக்காய்ச்சல் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க இலங்கை உஷார்

mexico_flu_.jpgஉலகின் சில நாடுகளில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முன்னேற்பாடுகளை அமைச்சின் உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மெக்ஸிகோ, ஐக்கிய அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெவ்வேறு பிரதேசங்களில் இக்காய்ச்சல் பரவி வருகின்றது. இக்காய்ச்சலுக்கு மெக்ஸிகோ நாட்டில் மாத்திரம் குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

1500 க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டே இக்காய்ச்சலைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்முன்னேற்பாட்டின் ஓரங்கமாக கொழும்பு துறைமுகத்திலும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

இதேநேரம் இக்காய்ச்சலைத் தவிர்க்கும் திட்டத்தின் மற்றொரு அங்கமாக நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருப்பவர்கள் எவராவது இனம் காணப்படுவார்களாயின் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறும் இவ்வாறானவர்களின் இரத்தமாதிரிகளை உடனடியாக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்கள் மத்தியில் அதிக காய்ச்சல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டை சுழற்சி, இருமல் போன்றவாறான அறிகுறிகள் தென்படலாம், இக்காய்ச்சல் சில நேரம் நியூமோனியாவாகக் கூட வளர்ச்சி பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • ramesh
    ramesh

    புலிக்காச்சலைக் குணப்படுத்துவதே ரொம்ப கடினம்.அது வேற பன்றிக்காச்சலுமா?

    Reply
  • BC
    BC

    ramesh புலி காய்ச்சலால் துன்பப்படும் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னுமொரு கேடா என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் புலி காய்ச்சலால் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் கொடுரமாக பாதிக்கபடுகிறார்கள்.
    ஆனால் புலி காய்ச்சலால் துன்பப்படும் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களை இந்த பன்றிக் காய்ச்சல் ஒன்றுமே செய்ய முடியாது. ஏன் என்றால் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் ஏற்கெனவே இதை விட கொடுமையான புலி காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளார்கள்.

    Reply
  • Kullan
    Kullan

    கிழக்கே கோழிக்காச்சல் மேற்கே பண்டிக்காச்சல் ஊரிலை புலிக்காச்சல். புலிகள் தமிழீழம் வேண்டாம் என்றபின்பும் ஐரோப்பிய தெருக்களில் தமிழீழக்காச்சல். இன்னும் எத்தனை காச்சல் ஐயா வரப்போகுது. உள்ள புலிக்காச்சலையே தடுக்க முடியவில்லை இதுக்குள் பண்டிக்காச்சலைத் தடுக்கப்போகிறாராம். சும்மா போங்கையா

    Reply