தமிழ் பகுதிகளுக்கு எம். பி.க்களாகிய எங்களால் கூட செல்ல முடியாது – இந்தியாவில் சம்பந்தன்

tna_.jpgதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு பிரதிநிதித்துவம் வகிக்கும் பகுதிகளுக்குகூட எம்.பி. க்களாகிய நாங்கள் செல்லமுடியாத நிலைமை இருப்பதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளியாகும் “ஸ்ரேற்ஸ்மன்’ பத்திரிகைக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இதனை தெரிவித்திருக்கும் சம்பந்தன் உண்மையில் நாங்கள் நீதியற்றமுறையில் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் பகுதிகளுக்கோ அல்லது முகாம்களுக்கோ நாம் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய பகுதிகளில் தமிழர்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்படுவது தொடர்பான தகவல்களை எமக்குள்ள தொடர்புகள் மூலம் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளை புதுடில்லியில் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தனிடம் கேட்கப்பட்டபோது மோதல் சூன்யப் பகுதியிலுள்ள மக்களின் “வாழ்வதற்கான உரிமையை’ நாங்கள் கேட்டதாக சம்பந்தன் கூறியுள்ளார். தற்போதைய தருணத்தில் எமது கரிசனை மோதல் சூன்யப்பகுதியிலுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் பற்றியதே என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

தினமும் அதிகளவு இழப்புகள் ஏற்படுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொதுமக்களை புலிகள் மனிதக்கேடயமாக வைத்திருப்பதாக கொழும்பு தெரிவித்திருப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது அநேகமான மக்கள் வன்னிப்பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்றும் அப்பிராந்தியம் வழமையாக புலிகளின் ஆதரவு தளம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சனச்செறிவான இடத்திற்கு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தன் இலங்கையின் கள நிலைவரத்தை சர்வதேச சமூகம் இப்போது விளங்கிக் கொண்டுள்ளதாக தென்படுகின்றது.

என்றும் பல்வேறு விதமான போர்வைகளில் தமிழர்கள் வேருடன் அப்புறப்படுத்தப்படுதல் அல்லது படுகொலைகள் என்பன பற்றி மெதுவாக விழித்தெழுவதை காண முடிகின்றது எனவும் வாக்குரிமை பறித்தல் மற்றும் அரச ஏற்பாட்டுடனான நிகழ்ச்சித்திட்டத்துடன் இது மேற்கொள்ளப்படுவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • s.s.ganendran
    s.s.ganendran

    இவர்கள் தமிழ்க் பகுதிகளுக்கு போகாமல் இருப்பதுதான் தமிழருக்கு செய்யக்கூடிய ஒரே பேருதவி. சம்பந்த்தன் வேண்டுமானால் திருகோணமலைக்கு போகட்டும் வன்னிக்கு போய் அங்கு சந்த்திப்பதற்கு இப்போ யார் உண்டு?. மேதகு தலைவரும் தலைமறைவு பொலிஸ் கொஸ்த்தாப்பு நடேசன் ஒளித்திருந்த்து ஈ மெயில் பேட்டி பின்பு இவர்கள் போய் சந்த்திக்க யார் உண்டு?

    Reply
  • thurai
    thurai

    புலிகளிடமிருந்து தப்பிவருபவர்களை புலிகள் துரோகிகள் என்ச் சொல்லி சுட்டார்களா? அல்லது புலிகளிற்காக் உயிர் கொடுக்க மறுத்தமைக்காக் சுட்டுக்கொன்றார்களா? இந்த கேள்விகளிற்கு உங்களால் உலகத்திற்கு பதில் கூறமுடியுமா?

    புலிகளினால் திட்டமிடப்பட்டு இலங்கை இராணுவத்திற்கு மக்களை பலி கொடுப்பதை தடுக்க ஓர் குரல் கொடுங்கள அதுவே போதும்.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    அகதிகளாக வன்னியிலிருந்து வந்திருக்கும் மக்களுக்காகவாவது உதவலாம். சிங்களவன் உதவுகிறான். தமிழன் உதைக்கிறான். மக்கள் செருப்போட ரெடியா இருப்பாங்கள். போன போனன இடத்தில நிக்கிறது உடலுக்கு சுகம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏற்கனவே மக்களின் பிரதிநிதியாக உங்கள் கூத்தமைப்பு எம்பி விநோதராலிங்கம் சென்று வந்தவர் தானே. நீங்களும் மக்களின் பிரதிநிதிகளாகச் செல்ல நினைத்திருந்தால் நிச்சயம் அரசு அனுமதி தந்திருக்கும். ஆனால் நீங்கள் புலிகளின் கையாட்களாகச் செல்வதற்கு அனுமதி கேட்டால் எப்படி அரசு அனுமதி தரும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மனநோயாளிகள் போல் புலம்பும் கூத்தமைப்பினரே இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். இவர்களில் உங்கள் பிள்ளைகள் யாராவது உள்ளனரா?? உங்கள் பிள்ளைகள் அனைவரும் தலையின் பிள்ளைகள் போல் வெவளிநாடுகளில் பட்டப்படிப்புகளில் மூழ்கியுள்ளனர். ஆனால் இந்தப் பிள்ளைகளின் தலைவிதியை இப்படி மாற்றியமைத்தது யார்?? பதில் சொல்வீர்களா??

    இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள்.

    http://www.youtube.com/watch?v=Vgv582GxwDY&eurl=http%3A%2F%2Flive%2Eathirady%2Eorg%2F&feature=player_embedded

    Reply
  • ramesh
    ramesh

    ஐயா நீங்கள் இருக்குமிடத்திலிருந்து கொண்டால் எல்லாம் செளக்யமே-இது தமிழன் சொன்னது. இலங்கைத் தமிழன் சொன்னது.

    Reply