சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தரமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுவீடன் அமைச்சருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு எதனையும் விடுக்கவில்லை எனவும், இதன் காரணமாக சுவீடன் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் எனவும் தெரியவருகிறது.எனினும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் வேறொரு நாளில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kullan
நோர்வே வெட்டிப் பிடுங்கி விட்டார்கள் இனிச் சுவீடனாக்கும். புத்திசாலி நோர்வேயை மாதிரி அழையா விருந்தாளியாகச் சென்று மூக்குடையாமல் தப்பினார்கள் சிங்கள அரசிடம். சூல் கெய்மை கூட்டிவந்து வாசல் இருக்கவிட்டபின் உள்ளே நோர்வே பிரதமமந்திரியாக இருந்து யாகலாண்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இலங்கையரசு. வாசலில் இருந்து விட்டு வந்தார் சூல்கெய்ம் அன்று
மாயா
பாவம் இந்தப் பழம் புளிக்கும் கதை ஞாபகத்துக்கு வருகிறது.
இனி நோர்வே சுவீடன் ஐநாவை விட்டுட்டு வேறு இடம் பாத்து கத்துங்கோ.
தேவைக்கு மட்டுமே புலிகளும் புலி வாலுகளும் கால் பிடிக்கும். பிறகு …………