பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்குகின்றது இராணுவத்தின் 58 ஆவது படையணி?

images-army.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இராணுவத்தின் 58 ஆவது படையணி நெருங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை மீட்கும் மனிதநேய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 53 ஆம் 58 ஆம் படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 58 ஆவது படையணி இப்போது நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபாகரனும் அவரது மிக நம்பிக்கைக்கு உரியவர்களான பொட்டு, சுசை, பானு என்போர் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மிகப் பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் இருப்பதாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி வந்து இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமானப் படையின் ஆளில்லா விமானம் விடுவிக்கப்படாத பகுதியை மிக நுணுக்கமாக அவதானித்து வருகிறது. அதேவேளை கடற்படையினரும் வலைஞர் மடத்தில் இருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள 7 கி.மீ கடற் பிராந்தியத்தை இடைவிடாது கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • Constantine
    Constantine

    What about the escape news then?

    Reply
  • thurai
    thurai

    விடுதலை வீரனென்றால் தன் உயிரைக்கொடுத்து தன்மக்கள் உயிரைக் காப்பவனேயாகும். தன் மக்கள் உயிரைப் பலிகொடுத்து தன் உயிரை பதுங்கு குளிக்குள் புகுந்து காக்கும் தலைவரை, சூரியக்கடவுள் என் வணங்கிய புலத்துத்தமிழரே நீங்கள்தான் காக்கவேண்டும்.

    துரை

    Reply
  • Kullan
    Kullan

    உதைத்தானே நெடுகலும் சொல்லுறியள். இன்னும் நெருங்கியாதாகத் தெரியவில்லை. பிரபாகரன் நிறைகுடம் கும்பம் வைத்துக் காத்துக்கொண்டு இருக்கிறார் போங்கோ கெதியா. வடை பாயாசம் முடியப்போகிறது

    Reply
  • மாயா
    மாயா

    Kullan
    உங்களுக்கு இன்னமும் கோயில் சாப்பாடு மறக்க இல்லயே? பிரபாகரன் ஏதோ கோயில் பூசாரி மாதிரி நினைக்கிறியளோ?

    Reply
  • Hg
    Hg

    வன்னி போர் முனையிலிருந்து பிரபாகரனும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரும் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப் புலி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

    இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அங்குதான் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. சிங்கள ராணுவ அதிகாரிகளும் இதையே கூறிவந்தனர். ஆனால், நிலைமை கை மீறும்போது, நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல பிரபாகரன் திட்டம் வைத்திருந்ததாக ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் தெரிவித்ததாக ராணுவம் கூறியது. இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்தார்.

    ஆனால், போர் பகுதியில் இருந்து பிரபாகரனும் முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களும் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் பகுதியில் பிரபாகரன் தற்போது இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள யாலா காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டிருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது.

    இது உண்மையானால், இலங்கை ராணுவத்துக்கு இதை மிகப்பெரிய அதிர்ச்சி வேறு இருக்காது என இலங்கை ஆதரவு இணைய தளங்கள் கூறியுள்ளன. இதனால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    கிழக்கு மாகாணம் ஏற்கெனவே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, ராணுவத்தின் கைக்குப் போய்விட்டது. ஆனாலும் அங்கு புலிகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கொரில்லா முறையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாலா காட்டுப் பகுதியில் சமீபத்தில் பெரும் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //What about the escape news then? – Constantine //
    சிலவேளை தலை தப்பியிருக்கலாம். அதைக் கூட நிச்சயமாக கூற முடியாது. ஆனால் ஏனையோர் மாட்டுப்பட்டுத் தான் நிற்கினம். இல்லையேல் புலத்துத் தமிழரையெலல்லாம் வீதியில் இறங்குங்கோ என்று நடேசன் கத்த மாட்டார்.

    Reply
  • மாயா
    மாயா

    இது இராணுவத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சியாகவும் இருக்கலாம். பிரபாகரன் இல்லாவிட்டால் மக்களை இவ்வளவு பிடித்து வைத்துக் கொண்டும் புலத்தில் போராட்டங்கள் நடத்த வேண்டிக் கொண்டும் இருக்க மாட்டார்கள்.

    Reply
  • ramesh
    ramesh

    “ஆடுவோம் பாடுவோம் போராடுவோம்-ஐரோப்பாவில் தமிழீழம் வேண்டுமென்று”:
    விடைகொடும் நடேசா விரைந்து செயல் படுவோம்.

    Reply
  • thevi
    thevi

    யாலா காட்டுப் பகுதியில் சமீபத்தில் பெரும் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம்”

    புதினத்தில் படம் வரவில்லையே?

    Reply