வன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாத யாத்திரையொன்றை நாளை கல்கிஸ்சையிலிருந்து ஹங்குலான வரை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பாத யாத்திரையில் 200 பௌத்த பிக்குகள் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள வன்னி மக்களுக்காக நிவாரண உதவி சேகரிப்பதே பௌத்த பிக்குகளின் பாத யாத்திரையின் நோக்கமாகும்.
மாயா
இவர்களுக்குள்ள மனிதாபிமானமம் புலிகளிடம் இல்லை
msri
புத்தமத தர்மம் இலஙகையில் முற்றாக ஒழிந்துவிடவில்லை! அதற்கு இது ஓர் சாட்சி!
பார்த்திபன்
பெளத்த துறவிகளின் மனிதாபிமானத்திற்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் மனிதாபிமானத்தை அனைத்து பெளத்த துறவிகளுக்கும் பரப்புங்கள்.
chandran.raja
இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடுபவர்கள் ஆதாயத்தை தேடும் அரசியல்வாதிகளே ஒழிய நாட்டு மக்கள் அல்ல. இயற்கை சுனாமி போல் இனவாதத்தை தூண்டிவிட்ட பிரபாகரன் சுனாமியும் ஓர்யிருநாட்களில் முடிவுக்கு வருகிறது. இனி பல்லின மக்களையும் மதங்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஐக்கிய இலங்கையை தேடிப் போவதற்கான அரசியல்வாதிகளை தேடிப்போவதே நாட்டுமக்களின் கடமையாகும்.
thurai
கூடப்பிற்ந்த தமிழனையும், மதிக்காமல்,சிங்களவரையும் மதிக்கமால் தமிழருககுள் வாழ்வோரே சிங்கள தமிழ் உறவிற்கு பங்கம் விளைப்பவர்கள்.
மதிப்பைக் கொடுத்தே மதிப்பைப் பெறுவதும், அன்பைக் காட்டியே அன்பைப் பெறுவதும் இயல்பு.
தலைவரின் புலிக்கொடியையும் துவக்குகளையும் பார்த்து தமிழரையே வெறுத்தவர்கள், இப்போ வன்னி மக்களின் நிலைமை கண்டு கண் கலங்குவ்தில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
துரை
accu
வன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாதயாத்திரை போகிறார்கள் என்ற செய்தி மன மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தினாலும் இவையெல்லாம் உண்மையிலேயே மனிதாபிமானத்தால் நடைபெறுகிறதா இல்லை வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் விடயங்களோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி பெரும் மனித அவலம் ஏற்ப்பட்டவுடன் வவுனியாவில் பொதுமக்கள்,வர்த்தகர்கள்,மாணவர்கள்,புளொட் உறுப்பினர்கள் என எல்லோரும் உதவிக்கு விரைந்ததையும் முஸ்லிம் மற்றும் சிங்கள இன மக்கள் உணவு தயாரித்து வழங்கியதையும் செய்தியாய் அறிந்தபோது உலகின் எங்கும் நடக்காத கொடுமையை அனுபவித்து வந்த அப்பாவி மக்களுக்கு இவை ஒரு மனத்தென்பைக் கொடுக்குமென எண்ணினேன். ஆனால் இன்று எனது மிக நம்பிக்கையான நண்பர் ஒருவர் கூறிய செய்தி என்னால் ஜீரணிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்பு கருதி விபரம் குறைத்து எழுதுகிறேன். எனது நண்பரின் மிகநெருங்கிய உறவினரான ஒரு பெண் தொழில் நிமித்தம் பல வருடங்களுக்கு முன் வன்னிக்குச் சென்றவர். அங்கு மாட்டிக்கொண்டார். பிள்ளையை புலிகள் பிடிப்பார்கள் என்பதால் வெளியில் வர சில வருடங்களுக்கு முன்பிருந்தே முயன்றவர். அது நடக்கவில்லை. என் நண்பர் அது பற்றி என்னுடன் கதைத்ததால் எனக்கும் அது தெரியும். பின்னர் இப்போ சில மாதங்களுக்கு முன் களவாக வெளியில் வந்து ஒரு அகதிமுகாமில் தங்கியுள்ளார். அவர் என் நண்பருடன் இன்று தொலைபேசியில் பேசிய போது கூறியுள்ளார் இப்போ இராணுவத்துடன் தமிழ்ப் பெடியங்கள் சிலர் முகாமுக்கு வருவதாகவும் அவர்கள் அங்கு உள்ளவர்களில் வெளிநாட்டில் உறவினர்கள் உள்ளவர்களை அறிந்து அவர்களை வெளிநாட்டு உறவினர்கள் மூலம் பணம் பெற்றுத் தரும்படி மிரட்டுகிறார்களாம். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரியல்லவா இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு?
பார்த்திபன்
//வன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாதயாத்திரை போகிறார்கள் என்ற செய்தி மன மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தினாலும் இவையெல்லாம் உண்மையிலேயே மனிதாபிமானத்தால் நடைபெறுகிறதா இல்லை வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் விடயங்களோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.
இப்போ இராணுவத்துடன் தமிழ்ப் பெடியங்கள் சிலர் முகாமுக்கு வருவதாகவும் அவர்கள் அங்கு உள்ளவர்களில் வெளிநாட்டில் உறவினர்கள் உள்ளவர்களை அறிந்து அவர்களை வெளிநாட்டு உறவினர்கள் மூலம் பணம் பெற்றுத் தரும்படி மிரட்டுகிறார்களாம்.- Accu//
பௌத்த பிக்குகள் வன்னி மக்களுக்காக பொருட்கள் சேகரிக்கவே பாதயாத்திரை செல்கின்றார்கள். எனவே அது பற்றிய விமர்சனம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
மேலும் உங்கள் நண்பர் மூலம் அறிந்தாக நீங்கள் கூறும் “வெளிநாட்டு உறவினர்கள் மூலம் பணம் பெற்றுத் தரும்படி மிரட்டுகிறார்களாம்” என்பது நடைபெறுவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கலாம். வாங்கியே பழகிய சில கைகளுக்கு பழக்க தோசத்தை மறக்க முடியாமலிருக்கலாம். எனவே இந்த விடயத்தை தற்போது வவுனியா அரச அதிபராக இருக்கும் திருமதி சார்ள்ஸிடம் இரகசியமாக தெரிவித்துவிடும்படி உங்கள் நண்பரிடம் கூறிவிடுங்கள். அரச அதிபர் அதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடுப்பார்.