ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக்கொணர உள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், தங்களுடைய ஊழல்களை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன் என்று அண்மையில் நாமல் ராஜபக்ச அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாமல் ராஜபக்ச போன்றவர்கள் கொள்ளையடித்த பணம் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? வேறு வகையில் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வருவோம்.
ஊழல்வாதிகள் தாங்கள் இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி மணித்துளிகள் ஆகும்.
மிக விரைவில் அவர்கள் கூண்டோடு மாட்டிக் கொண்டு தங்கள் தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.