எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் (11.10.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளார்.
கடந்த காலங்களில் அங்கஜன் இராமநாதன் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள காரணத்தினால் அந்த கட்சியின் பெயரையே அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாகவே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றிருந்தார்.