மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி அதிகாரிகள் பலர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் நடத்தப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் காரணமாக தாம் அது குறித்து பேசுவது பொருத்தமற்றது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளிடம் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.