இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த BMW காரின் Chassis எண்ணை சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சோதனை செய்தபோது இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த BMW வாகனமானது திருடப்பட்ட இலக்கத் தகடு மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும்இ இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவு அமைப்பைச் பரிசோதித்ததில் அது சட்டப்பூர்வமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களை வழங்கிய அதிகாரிகள்இ சட்டவிரோதமாக காரை இலங்கைக்குக் கொண்டு வந்த பின்னர் இரு வேறாக காணப்பட்ட பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
அப்போது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் குறித்த கார் இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட போதிலும்இ தனது கட்சிக்காரருக்கு இதில் தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது எனவும் தெரிவித்தார்.
எனவே எந்தவொரு நிபந்தனையின் கீழும் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.