Wednesday, September 29, 2021

‘ஈழத் தாய்’ ஜெயலலிதா- ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம்

j-j-j.jpgதனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு புலம் பெயர்ந்து வாழும் ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.

தனி ஈழம் அமைப்போம் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தென்துருவத் தமிழ் சங்க சம்மேளனம் தலைவர் சிற்றம்பலம் ராகவன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்ற இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். ஆறுதல் அடைகிறோம்…

அண்மையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவல நிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.

இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது. இதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அதிமுக கட்சிக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர ஈழமே. இதனை வலியுறுத்தி தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகிறோம்.

இவை சம்பந்தமாக தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

6 Comments

 • thurai
  thurai

  வெந்த புண்ணில் வேல். வன்னி மக்களை உயிருடன் காக்க எந்த வ்ழியாலும் முடியாமலுள்ளது. முதலில் மரண்த்திலிருந்து காக்கவேண்டும். புலிகளிடமிருந்து காக்கவேண்டும். அதன்பின்பு மக்களின் எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு.

  சொல்வோர் சொன்னால் கேட்போர்க்கு என்ன மதி.

  துரை

  Reply
 • Kullan
  Kullan

  இது பெரிய பகிடி. ஈழத்திலுள்ள எல்லா அமைப்புகளுமே தமிழீழம் வேண்டாம் என்றும் புலிகள் கூட தமிழீழம் தேவையில்லை என்றுதானே ஒஸ்லோ உடன்படிக்கைக்குக் கைச்சாத்து இட்டு 5வருடங்களுக்கு மேல் ஏமாற்றப்பட்டார்கள். அம்யையார் எப்படித் தமிழீழம் காணப்போகிறார்; தமிழன் தான் ஏமாருகிறேன் பிடி பந்தையம் என்றால் நாம் என்ன செய்யமுடியும்.

  Reply
 • msri
  msri

  தென்துருவ தமிழ் சங்க சம்மேளனக்காரர்>மண்குதிரையை நம்பி (செல்வியின் தமிழ்ஈழம்) ஆற்றில் இறங்குகின்றார்கள்!

  Reply
 • Thambiah Sabarutnam
  Thambiah Sabarutnam

  இந்தியவைத் துண்டாட வெளிநாட்டவர் ஒருவர் உதவுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளுமா?

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே புல(ன்)ம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள்./–
  The revolt of the British colonists in North America has been defined as the first assertion of the right of national and democratic self-determination because of the explicit invocation of natural law, the natural rights of man and consent of, and sovereignty by, the people, ideas inspired particularly by John Locke’s writings.

  Woodrow Wilson revived the American commitment to self-determination, at least for European states, during World War I. When the Bolsheviks came to power in Russia in November 1917, they called for Russia’s immediate withdrawal as a member of the Allies of World War I. They also supported the right of all nations, including colonies, to self-determination. (As early as 1914 Lenin wrote: “[It] would be wrong to interpret the right to self-determination as meaning anything but the right to existence as a separate state.”[5]) The 1918 Constitution of the Soviet Union acknowledged the right of secession for its constituent republics.—“NOW RUSSIA IS OPPOSING THE INCLUSION OF “Tamileelam Agenda” in SECURITY COUNCIL- BUT FORMER COLONY SUPPORTS THE INCLUSION”

  .……The year 2000 United Nations Millennium Declaration failed to deal with these new demands, mentioning only “the right to self-determination of peoples which remain under colonial domination and foreign occupation.”The sufferings will change,when people liberated from colonial domination of ,புலம்(ன்)பெயர்ந்த தமிழர்கள்.

  Reply
 • kullan
  kullan

  இவருக்கு பொய் என்பது வாய் வந்த கலையோ? ………………………..மனித இனத்தையே வெருட்டி வாழ்ந்தவந்த …………….இன்றும் சரிவரவே செய்கிறார்கள். எமாந்த வெங்காயங்களாக பொதுமக்கள். தான் ஏமாரப்போகிறேன் எனப்பந்தயம் கட்டும் மக்களை நாம் என்ன செய்யமுடியும். வாழ்க … பொய்மையும் ஜெயலலிதா அம்மையாரே.

  Reply