முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அப்பால் புலிகளின் 3 படகுகளைக் கடற்படையினர் தாக்கி நிர்மூலமாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
நேற்று (01) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 23 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ள தாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையின் டோரா மற்றும் அதிவேகப் படகுகள் மூலம் புலிகளின் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
புலிகளின் படகுகள் நிர்மூலமாக்கப் பட்டதில் புலிகள் தரப்பில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற கடற் பகுதியில் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் கடற்படையினருக்கு எதுவிதமான சேதங்களும் ஏற்படவில்லை யென்றும் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.