“ஒட்டு மொத்த தலித்களும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும்” என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
மக்களவை தேர்தலுக்கான திமுக பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடந்தது. முதல்வர் கருணாநிதி இதற்குத் தலைமை வகித்தார்.இப்பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் தொல்.திருமாவளன் பேசுகையில்,
“ஒட்டுமொத்த தலித்களுக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். ஏன் தெரியுமா? அதிமுக, தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தலித்துகள் வளர்வதிலும் அதிமுகவுக்கு விருப்பமில்லை.
எத்தனையோ தலித் அமைப்பினர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தார்கள். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. திமுக தலைவர் கலைஞரோ தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனம் உள்ளவர். அதனால்தான் தலித் அமைப்பான விடுதலை சிறுத்தைகளுக்கு 2 சீட் கொடுத்திருக்கிறார். அதனால் திமுக கூட்டணியை ஆதரியுங்கள்; அதிமுகவைப் புறக்கணியுங்கள்” என்றார்.
thurai
திராவிடர்,தமிழர்,ஈழத்தமிழர்,தலீத்துக்கள் எல்லாமே
பிழைப்புக்காக வந்த பெயர்களேயாகும். எல்லோரையும்
மக்களாக மதிக்கும் தலைமுறையை உருவாக்க முயலுங்கள்.
சமூகங்களையும், இனங்களையும் உங்கள்சுயநலன்களிற்காகவும்,
அரசியல் லாபஙளிற்காகவும் பாவித்து அனாதையாக்காதீர்கள்
துரை
Kullan
அரசியல் திருடர்களில் பெரும் திருடன் திருமாவளவன். தலித்துக்கள் படும் துயர் தெரியாது அவர்களின் எண்ணங்களிலும் உணர்வுகளிலும் அரசியல் விளையாடுகிறார். இவர்கள் உணரரும் காலம் வெகுதூரத்தில் இல்லை
palli
நீங்க இப்படி கொட்டாவி விடிறியள். ஆனால் அந்த அம்மாவோ ஒட்டுள்ள ஒட்டுமொத்த தமிழரும் உங்களை புறகணிக்க வேண்டுமென அல்லவா ஏப்பம் விடுகிறார்.