குடை பிடிக்கும் அரசியல்: யார் யாருக்குக் குடை பிடிப்பதென்பதே பெரும் அரசியலாகியுள்ளது. தமிழ் தேசியவாத அரசியல் வாதிகள் இன்னமும் தங்களை எஜமான்களாகவும் பண்ணையார்களாகவும் ஏனையவர்களை அடிமைகளாகவும் தாழ்ந்தவர்களாகவும் தான் எண்ணுகிறார்கள் என்பது இந்தக் குடை அரசியலில் வெளிப்பட்டு நிற்கின்றது. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு ஒருவர் குடை பிடிக்க அவர் வெள்ள அனர்த்த நிலைமையைப் பார்வையிடுகிறார். அதே போல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் ஒருவர் குடை பிடிக்க அவர் நிலைமையைப் பார்வையிடுகின்ற நிலை தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏன் இவர்களுக்கு தங்களுடைய குடையைத் தாங்கள் பிடிக்க முடியாமற் போனது. வல்வெட்டித்துறை மக்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களை கிட்டக்கூட எடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தங்களைத் தள்ளி நிற்கச் சொல்வார்கள் என்கின்றனர்.
மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை தேசிய மக்கள் சக்தி குறைக்கின்றது. அவர்கள் மக்களோடு களத்தில் நிற்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் மோசடியற்ற நிர்வாகத்தை அமைக்கிறோம் என்று சொன்னதோடு அதனைச் செயலிலும் காட்டுகிறார்கள். ஆடம்பரம் இல்லாமல் மக்களோடு மக்களாகக் கலக்கின்றனர். இதனைச் செயற்கையாகச் செய்ய முடியாது. தன்னியல்பாக வரவேண்டும். அதனால் தான் கடற்தொழில் அமைச்சர் தன்னுடைய குடையைத் தானே பிடிக்கிறார். தமிழ் தலைவர்களுக்கு குடை பிடிக்க ஒரு கூலி தேவைப்படுகின்றது.