மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு இப்படி படுகொலை செய்யப்படடிருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.இது உண்மையிலே வருத்தமளிக்கின்ற செயலாகும். இதனை யார் புரிந்திருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நான் பொலிஸாரினைக் கேட்டிருக்கின்றேன்.
இந்தச் சம்பவமானது உண்மையில் கிழக்கின் சாதாரண நிலையினைக் குழப்ப விரும்புகின்றவர்களின் செயலாகவே நான் பார்க்கின்றேன். அதாவது கிழக்கு மாகாணத்திலே தற்போது அமைதியும் ஜனநாயகமும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்த வேளையிலே அதனை விரும்பாத ஒரு சில விசமிகளே இவ்வாறான வேலைகளைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாது இருப்பதற்குரிய அனைத்து நடவடிக்கையினையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுவருகின்றார்கள். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கையினயும் கோரி இருக்கின்றேன்.” என இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
Kullan
பிள்ளையான்! அப்படிச் சட்டத்தின் முன் நிற்கவேண்டும் என்றால் நீர்தான் நிற்கவேண்டும். கருணா அம்மான் அப்படித்தான் சொல்கிறார்
Rohan
சரி இந்த விதமான கொடுமைகளுக்கு யார் பொறுப்பு எடுக்கப் போகிறார்கள்? எட்டு வயதுக் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு இல்லை.நீங்கள் சூட் போட்டுக் கொண்டு மகிந்தவுக்கு கொடி பிடிக்கப் போகிறீர்கள். என்ன கேவலம்! ஓ.. அம்மான் வரும் போது போய்க் கேளுஙக்ள் என்று நீங்கள் சொல்வீர்கள்!
palli
அட பாவி மனிஸா எப்படி இப்படியெல்லாம் உங்களால் பேச முடிகிறது. ஆனாலும் இந்த குழந்தையின் ஆவியும் பழிவாங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆக குழந்தயான் என பெயரை வைத்து கொண்டு. கொல்லாதே கொல்லாதே குழந்தைகளை கொல்லாதெ.
Rohan
அது சரி முதல் அமைச்சரே. இன்னொரு இணையத்தில் படித்த செய்தி ஒன்று.
ஆற்முகம் வனஜா என்ற பெண் ஒருவரை நேர்முகப் பரீட்சை என்று பொய்க் அழைப்பு அனுப்பி வாழைச்சேனைக்கு வரவழைத்து வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொன்றதாக உங்கள் பழைய தலைவர் அம்மானின் கும்பலில் இருந்து இருவர் பிடிக்கப் பட்டுள்ளார்களாம். என்ன மண்ணாங்கட்டி ஐயா செய்கிறீர் உந்தநாற்காலியில் இருந்தபடி?
இப்படி எட்டு வயதுக் குருத்துகளுக்கும் துணையற்ற பெண்களுக்கும் பெற்றுக் கொடுக்கும் விடுதலை மகத்தானது. உங்கள் மாண்புமிகு திருவாயைத் திறந்துநீங்களே சொல்லுங்கள். புலி பொறுப்பில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் செய்ய எவன் துணிந்திருப்பான்? மண் அள்ளிச் சாபம் தர வேண்டும் உங்கள் எல்லோருக்கும்!!!
நண்பன்
புலிகள் வெடிக்க வச்சில்ல தன் ஆசையை தீர்த்துக் கொள்ளும்.
பிள்ளையானை ஆட்சியை கவிழ்க காலம் நெருங்குது. அது யாரால் என்பது மட்டும் தெளிவில்லை. அரசா? கருணாவா? இல்லை பிள்ளையானின் பிள்ளைகளா?
இவை தொடர்ந்தால் அது நடக்கும்.
palli
//புலி பொறுப்பில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் செய்ய எவன் துணிந்திருப்பான்//
அப்போ இவர்கள் யார். எங்கிருந்து வந்தார்கள்.???
கத்து கொடுத்தது அந்த புலி. நடைமுறை படுத்துவது இந்த புலி.