தமிழீழ தாயகத்தில் எம் உறவுகள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானிய இளையோருக்கு வெளிகாட்டும் வகையில் Dartford பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை அனுமதியுடன் மேல் வகுப்பு மாணவருக்கு தமிழீழ வரலாற்றையும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் 20 நிமிட ஒளித்தொகுப்பு மூலம் காண்பித்து தன்னுடைய பரப்புரையை முன்னெடுத்துள்ளார்கள்.
தமிழீழ வரலாற்றுடன் தமிழ் மக்கள் இன்று படும் இன்னல்களையும் பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்களையும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். சில வேற்றின மாணவர்கள் இந்த துண்டுபிரசுரங்களை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். முதன்முறையாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைப் பற்றி தெரிந்து கொண்ட பல மாணவர்கள் கண்ணீர் மல்கியதுடன் தங்களால் இயன்றளவு இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
accu
இதேபோல் புலிகளின் வரலாற்றையும் விவரணப்படுத்தினால் கண்ணீர் விட்டவர்கள் காறித்துப்பிவிட்டு போவார்கள்.
மாயா
அச்சுவை வழி மொழிகிறேன்.
பிணத்தை வைத்து பிளைக்கும் கூட்டம் என்றால் அது பிச்சைக்காரக் கூட்டம்தான். அதைத்தான் புலிகள் எப்போதும் செய்கின்றனர். செத்தவர்களையும் தம்மால் சாகடித்தவர்களையும் படம் காட்டியே தம் வயிறு வளர்ப்பவர்கள் இவர்கள். இது விளங்காதவர்கள் நான் கடவுள் படம் பாருங்கோ. அதுதான் புலிகளின் தியரி.
அடுத்து அரசியல் கண்ணோட்டம் குறித்து கேள்வி கேளுங்கள். அதெல்லாம் தலைவருக்கு தெரியும் என்பதே பதிலாக வரும். புலம் பெயர்ந்தாலும் புலிக் கூட்டம் மொக்குகள்தான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையேயில்லை.
நண்பன்
லண்டன் பள்ளிக்கூடங்களுக்குள் பிணம் தின்னிகள் நுழைந்து படம் காட்டத் தொடங்கிட்டினம். அது உலகம் முழுவதும் பரவும் அபாயம் உண்டு. வன்னியில இப்படித்தான் புள்ளை புடிகாரங்கள் நுழைந்தவை. பின்னர் புலிகளில் குழழந்தைகள் இணைந்தன.
அல்கய்தாவின் நிலமைக்கு தமிழ் குழந்தைகளை கொண்டு போகும் முயற்சி இது. பெற்றோர்களே, பாடசாலை நிர்வாகங்களுக்கு நடக்கப் போவதை ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தி இவற்றை முளையிலேயே நிறுத்துங்கள்.
இல்லையென்றால், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் செய்யும் பயங்கரவாதங்கள் போல், எம் தமிழ் குழந்தைகளும் ஈடுபடும் அபாயம் உண்டு. அதன்பின் உங்கள் குழந்தைகளை சிறைகளில்தான் சந்திக்க வேண்டிவரும்.