வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிவாரணப் பணிக்காக ஜப்பான் வழங்கவுள்ள 480 மில்லியன் ரூபா அவர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த நிதி யுத்தத்துக்கே செலவிடப்படும். நிவாரணத்துக்கென நிதிவழங்கி தமிழின அழிப்புக்கு ஜப்பான் துணைபோகக் கூடாது.
ஜப்பானின் விசேட தூதர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. தமிழ் இன அழிப்பில் ஈடுபடும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதியை கையளிக்க வேண்டாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜப்பான் தூதுவர் யசூசி அகாஷியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
muni
இந்தப்பெரிய தொகையை கூத்தமைப்பிடம் கொடுத்தால்,அவர்கள் தங்களுக்குத் தேவையான புனர்வாழ்வு வேலைகளை கவனித்துக் கொண்டு உலகம் சுற்றி பொய் பேசித் திரியலாமல்லோ.
thurai
30 வருடங்களாக் புலத்துத்தமிழரிடம் வசூலிக்கப்ட்ட தொகையென்ன, அதனை புலிகள் என்ன செய்தார்கள்?
அதனை விடுவோம். வணங்காமண் ஏமாற்ருக்காரரையாவது பார்த்து ஒரு கேள்வி கேட்டீர்களா? அல்லது உங்களிற்கும் பங்குண்டா?.
துரை
மாயா
தங்களிடம் தரவில்லையென கோவம்? அரசாங்கமாவது ஏதாவது செய்யும். வந்த நாள் முதல் பார்த்து கிளிச்சது கூட்டமைப்புதானே? இதுதான் உங்கட கடைசி பாராளுமன்ற அமர்வு. ……………………….