உலகில் நடந்த மிகப்பெரிய இராசாயன விபத்தின் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

உலகில் நடந்த மிகப்பெரிய இராசாயன விபத்தின் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

அமெரிக்காவின் யூனியன் கார்பைட் (Union Carbide) நிறுவனத்திற்குச் சொந்தமான கிருமி கொல்லி தயாரிக்கும் இந்தியாவின் போபால் (Bhopal) மாநிலத்தில் இருந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவின் பின் அதன் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமல் அத்தொழிற்சாலையிலேயே உள்ளது. அதனை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக இது இன்றும் உள்ளது.

1984 டிசம்பர் 2 இரவு ஆரம்பமான விசவாயுக் கசிவு மறுநாள் காலையும் தொடர்ந்தது. காற்றில் கலந்த ஐசொசையனைட் வாயு ஓரிரு வாரத்தில் 30,000க்கும் மேற்பட்டவர்களைப் பலியெடுத்தது. இதன் உண்மையான தொகை இதனிலும் அதிகம் என்றே கருதப்படுகின்றது. இப்பகுதியில் பிறக்கின்ற குழந்தைகள் இப்போதும் அதன் தாக்கத்தல் பாதிக்கப்பட்டு குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்.

இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக கூறிக்கொண்ட போதும், போபால் விசவாயு விபத்தில் பலியானவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு, அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டது. இவ்வளவு மோசமான விபத்தின் பொறுப்புக் கூறலிலிருந்து யூனியன் கார்பைட் தப்பிக்க வைக்கப்பட்டது. இந்தக் கழிவை அகற்றுவதற்கு 40 ஆண்டுகள் எடுத்துள்ளது. இந்தப் பொறுப்பிலிருந்தும் யூனியன் காபைட் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு விபத்து அமெரிக்காவில் நிகழ வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்கான இழப்பீடுகளை அந்த நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும். தங்களுடைய தவறுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டடு சில வாரங்களில் இவ்விபத்து நிகழ்ந்தது. இந்திராகாந்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய மகன் ராஜீவ்காந்தி பிரதமரானார். 1989 டிசம்பர் வரை அவர் பிரதமராக இருந்தார். இவருடைய காலகட்டத்தில் நிகழ்ந்த இப்பாரிய விபத்தின் பொறுப்புக்கூறலிலிருந்து யூனியர்கார்பைட் நிறுவனம் தப்பிக்க வைக்கப்பட்டது.

தி ரெய்ல்வே மென் – The Railway Men’ என்ற விபரண நாடகமாகத் தயாரிக்கப்பட்ட படம் இந்த விபத்தை மிகத் தத்துரூபமாக விபரிக்கின்றது. யூனியக் கார்பைட் நிறுவனம் அங்கு உருவாகக் கூடிய வாயுவின் நச்சுத்தன்மையையும் அதன் தாக்கத்தையும் 1975ம் ஆண்டே அறிந்திருந்தும், அதன் ஆபத்தை வெளியிடாததும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அத்தொழிற்சாலையின் அடிப்படை பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்கவில்லை என்பதையும் அந்த விபரண நாடகம் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த ‘’விபத்துக்குக் காரணமானவர்கள் யூனியன் கார்பைட்டும் டோவ் கெமிக்கல்ஸ்ம் (Dow Chemicals, போபாலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்பபடி ஏன் வற்புறுத்தப்படவில்லை’’ என ரட்சன டின்ங்றா Rachana Dhingra என்ற உள்ளார் அழுத்தக்குழவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *