பன்றிக் காய்ச்சல் உலகில் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கையிலும் பன்றி இறைச்சியை உண்பது தவிர்க்கப்பட்டுள்ளது. புத்தளம் கொழும்பு வீதியில் பல இடங்களில் பன்றி இறைச்சி விற்பனையாளர்களை ஞாயிற்றுக்கிழமை காண முடியவில்லை.
சந்தைகளில் பன்றி இறைச்சி விற்பனை நடைபெறவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைகளில் பன்றி இறைச்சி வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வந்தது. இங்குள்ள உல்லாசப்பயணிகள் ஹோட்டல்களிலும் பன்றி இறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் இப்பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு சுகாதார பகுதி அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர். பன்றிகள் நோய்களுக்கு உள்ளானவையா எனவும் பரிசோதிக்கப்பட்டன.
கட்டுநாயக்க விமானநிலையத்திலும் வெளிநாட்டு பயணிகள் வரும்போது அவர்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டதா என பரிசோதிக்கப்படுகின்றனர். பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.