என்.பி.பிக்கு ஆதரவளிக்க மாட்டேன் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆதங்கம் !
அநுர அரசாங்கத்திற்கு நான் வழங்கிய அனைத்து ஆதரவுகளையும் இன்றிலிருந்து இல்லாமல் செய்வதுடன் இனிமேல் உண்மையான எதிர்க்கட்சியாக நான் நிற்பேன் என நாடாளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
64 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம்கொடுக்கவில்லை எனில் அது அரசாங்கத்தின் வெட்கம் கெட்ட செயல். சுயேட்சையான ஒரு தனி உறுப்பினரை கண்டு அரசாங்கம் ஏன் அச்சமடைகிறது? ஒரு ஹெட்லைற் போட்டதற்காக தன்னை கைது செய்யும் அரசாங்கம், ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரை இப்படி கைது செய்வார்களா என அர்ச்சுனா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நேரம் ஒதுக்குவது ஆளும் தரப்பின் பணியல்ல, அது எதிர்கட்சியின் பணியாகும். அவருக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. ஆகவே, இனவாத விமர்சனங்களை அரசாங்கத்தின் மீது சுமத்துவது தவறானது என்றார்.
இதேவேளை பா.உ அர்ச்சுனாவுக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து, அவரது தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மௌனம் சாதித்து வருவதாகவும், அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சிறு அசைவை கூட மேற்கொள்ளவில்லை எனவும் அவதானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.