உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !
உலக நாடுகளுக்கு எரிபொருளினை விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போதுஇ ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும் என தெரிவித்தார்.
சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும்இ அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது என குறிப்பிட்ட விஜித ஹேரத்இ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும் என்றார்.