பா உ ஓய்வூதியத்துக்காக மாதாந்தம் 235 லட்சம் ரூபா – ரத்து செய்யப்பட்டது ஓய்வூதியம் !
நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக வழங்கப்படும் தொகை என்பவற்றை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்க நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வரை 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை பெறும் 182 வாழ்க்கைத் துணைவர்கள் உள்ளனர். இதன்படி, 500க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மற்றும் கலைஞர்களுக்கு நாடாளுமன்றத்தின் கணக்குப் பிரிவு மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதாந்தம் 235 லட்சத்து 41 ஆயிரத்து 645 ரூபா (23,541,645) செலவாகிறது என்கிறது என்.பி.பி அரசாங்கம்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டது . இந்தப் பிரேரணையை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.