தமிழ் கட்சிப் பிரதிநிதிகள் மீட்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாட வேண்டும் – ஜனாதிபதி வேண்டுகோள்

pr-tam-deli.jpgதமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அரச படையினரால் மீட்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் கலந்துரையாடி புலிகளால் அவர்கள் தள்ளப்பட்டுள்ள தற்போதைய மன நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். தமிழ் கட்சிப் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் நேற்று மாலை சந்தித்து உரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

சகோதர மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான தமது பொறுப்பையும் கடமையையும் தாம் நன்குணர்ந்;துள்ளதுடன் அதனை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அதற்கு அனைத்து தமிழ் கட்சிகளினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்தின்; சவால்களுக்கு மத்தியில் தமது நாட்டையும் சகோதர மக்களையும் பாதுகாத்து அவர்களை நிரந்தர வசிப்பிடங்களில் குடியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம்  அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தை வலுவடையச் செய்வதற்காகவல்லாமல் அப்பாவி மக்களை வாழவைக்கவே முன்வரவேண்டும்.

வடக்கு மக்கள் 30 வருட காலமாக அனுபவித்து வரும் வேதனைகளை நன்கு உணர்ந்துள்ளேன் அவர்களின் மீள் குடியேற்றத்தின் பின்னர் அதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது. வடக்கின் நகர்ப்புரங்களுக்கு மட்டுமன்றி கிராமப்புறங்களுக்கும் வீதி, மின்சாரம்,  போக்குவரத்து, சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மக்கள் மீள் குடியேற்றப்படுவர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    அதி உத்தமர் முன்னால் ஆனந்த்சங்கரி ஐயா இருக்கிறார். அவர் பத்திரிகைகளில் விட்ட திறந்த மடலை உத்தமருக்குப் படித்துக் காட்டியிருப்பாரா? அந்தளவு தைரியம் இருக்குமா??

    அது சரி, நம்ம புது அமைச்சரைய்ம் காணவில்லையே! யாருக்க்கெல்லாம் பதவி கொடுக்க கூடாது என்று சொல்லவே அவருக்கு நேரம் போதாது. கூட்ட்த்துக்கெல்லாம் அவர் வர மாட்டார்.

    தயா மாஸ்டரும் ஜோர்ஜ் மாஸ்டரும் தனக்குப் போட்டியாக வரக் கூடாது என்று அவர் என்ன உதறல் எடுத்திருக்கிறார்! அதற்கு அவர் சொன்ன காரணம் பார்த்தீர்களா? இருவருக்கும் புலியில் சீனியோறிற்றி போதாதாம். இருவருக்கும் அரசியல் அறிவு போதாதாம். இரண்டு பேரும் எந்த இடத்தில் இருந்து வந்தார்கள் என்பதும் அம்மானுக்கு ஒரு குவாலிபிகேசன் கிறைரேரியாவாக் இருக்கிறது.

    Reply