தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி வரும் படை வீரர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட நமக்காக நாம் நிதியத்துக்கு இதுவரை 400 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் விலி கமகே தெரிவித்தார்.
தேசிய படை வீரர்கள் மாதத்தை முன்னிட்டு அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு, ரணவிரு அதிகார சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்லே தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். நமக்காக நாம் நிதியத்துக்கு அரசாங்க, தனியார்துறை, பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் போன்ற பலதரப்பட்டவர்களினதும் பங்களிப்பினாலேயே இத்தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை 900 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதே அமைச்சின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.