சோனியாவின் சென்னை-புதுச்சேரி பிரசாரம் திடீர் ரத்து

06-sonia.jpgகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டன. இத் தகவலை காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார். ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர். இந் நிலையில் சோனியா தனது ‌சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    தமிழகத்தில் காங்கிரசுக் கூட்டணிக்கு அரோகராதான்! கலைஞருக்கு சகவீனமா? சுகவீனம் ஆக்கப்பட்டதா? தமிழ்மக்களின்>மனிதப் பேரவலம்-இனப்படுகொலைகளுக்கு>கலைஞரும்-காங்கிரசும் எதைச் சொல்வது தமிழக மக்களுக்கு! தமிழகத் தேரதல் களம் இவர்களுக்கொரு பரிசோதனைக் கூடமாக உள்ளது!

    Reply