சுவீடனில் நந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் integration minister – Nyamko Sabuni தந்த வாக்குறுதியால் நிறைவுபெற்றது. நந்தன் அவர்கள் 9ஆவது நாளாக உண்ணாநிலையை மேற்கொண்டபோது மக்களால் பாராளுமன்ற வாசல் மறிக்கப்பட்டது. மறியல் போராட்டம் செய்தவர்கள் நந்தனின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தாம் அந்த இடத்திலிருந்து கலைந்துசெல்வார்கள் என்று திடமாகமாக நின்றார்கள். காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த பேரம் பேசலில் அமைச்சர் வந்து நந்தனைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
யோரான் திங்வேல் என்ற பாராளுமன்ற உறுப்பினரும் வந்து நந்தனைச் சந்தித்தார். அவர் வெளிநாட்டு அமச்சரான கார்ல் பீல்ட்டை சந்தித்து உரையாட ஒழுங்குசெய்து தருவதாக உறுதிமொழி கூறினார். இதன்பின் உண்ணாநிலைப் போராட்டத்தை நந்தன் முடித்துக்கொண்டார்
பார்த்திபன்
//அவர் வெளிநாட்டு அமச்சரான கார்ல் பீல்ட்டை சந்தித்து உரையாட ஒழுங்குசெய்து தருவதாக உறுதிமொழி கூறினார்.//
அட இவர் அமைச்சரோடை கதைக்கிறதற்காகவே உண்ணாவிரதமிருந்தவர். நானும் வன்னி மக்களை காப்பாற்றச் சொல்லியல்லோ உண்ணாவிரதமிருக்கிறார் எண்டு நினைத்து விட்டேன். ஆண்டவன் எங்கடை இலங்கைத் தமிழனை படைக்கேக்கை ஆனைக் காது போல பெரிய காதோடை படைச்சிருக்கலாம். எல்லோரும் காதுலை பூ வைக்கினம். ஆனால் காது தான் சின்னதாய்ப் போச்சே எணடு எனக்கும் கவலையாய் கிடக்கு.