கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவுக்கூட்டம்

Kalaichelvan கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல் மே 10ல் பரிசில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இவ்வொன்றுகூடலை உயிர்நிழல் சஞ்சிகை ஏற்பாடு செய்து உள்ளது. பாரிஸில் இருந்து நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இலக்கிய சஞ்சிகை இது என்பதும் இது காலஞ்சென்ற கலைச்செல்வனால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வொன்றுகூடல் நிகழ்வில் கலைச்செல்வனின் நண்பர்கள் தோழர்கள் உறவுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர். காலை 11:00 முதல் மாலை 7:00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்:

11:00 – துன்பம் சூழும் நேரம்: இலங்கை – இந்திய உறவுகளும் ஈழத்தமிழரும் – மு. நித்தியானந்தன்

12:30 – மதிய உணவு

13:30 – யாழ்ப்பாணத்து சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் – ச. தில்லைநடேசன்

14:30 – MEDIA & DEMOCRACY – காமினி வியாங்கொட

16:00 தேனீர் இடைவேளை

17:00 – கோணல்களும் நேர்கோடுகளும் – இலங்கையில் இனப்பிரச்சினை வி. சிவலிங்கம்

17:30 – திறந்த விவாதம்: இலங்கையில் இன்றைய யுத்த சூழலும் எதிர்நோக்கும் சவால்களும்

காலம்:
10.05.2009 ஞாயிற்றுக்கிழமை

மண்டபம்:
Salle Heindenhein
1er étage
6, Place du Marché du centre
92110 Clichy

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • chandran.raja
    chandran.raja

    நண்பா! தோழா!!
    உமக்கு நாம் என்ன சொல்ல இருக்கிறது?.எம்முடன் சேர்ந்து காய்ந்தீர்ரோ?
    நீதிக்கும் நியாயத்திற்கும் முகவுரையானாய் முடிவுரையும்யானாய்.
    கடைசிவரை உம்வழியே நாமும்.

    Reply
  • Ranjan
    Ranjan

    லக்சுமி இருந்ததால் கலைச்செல்வன் நினைவுகூரப்படுகிறார்.மற்றவா; அனாதையாய் கல்லறைகளில்..
    இணையங்களில்கூட அவர்கள் நினைவுகூரப்படுவதில்லை..

    Reply
  • palli
    palli

    கண்டிப்பாக நினைவு கொள்வோம்:
    அத்துடன் மூன்றாம் ஆண்டையும் அதில் நடந்த குளறுபடிகளையும் நினைவு வைத்து நிதானமாக செயல்படுவோம்

    Reply
  • london boy
    london boy

    பல்லி அதுக்காகத்தான் அதற்கென ரெண்டரைமணிக்கு நேரம் ஒதுக்கியிருக்குது…..

    Reply
  • Kusumpo
    Kusumpo

    கலைச்செல்வனைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் என்நெருங்கிய நண்பர் அடிக்கடி கலைச்செல்வனைப்பற்றிச் சொல்லுவார். தன்பிள்ளைக்குக் கூட கலைச்செல்வனின் பெயரையே வைத்தார். நல்லவர்கள் அதிககாலம் வாழ்வதில்லை காரணம் இது கலியுகம். நிகழ்ச்சி சிறப்புற என்வாழ்த்துக்கள்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எதற்காக வாழ்ந்தார்களோ எந்த இலட்சியத்தை முன்னெடுத்தார்களோ இலட்சியத்திற்கு துணைசேர்க்கும் நேரமும் காலங்களும் வரும் போது அவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். இந்த வரிசையில் தான் எம்முடன் வாழ்ந்து அனுபவித்து துணை நின்ற சபாலிங்கம் புஷ்பராஜா உமாகாந்தன் பராமாஸ்ரர் (இன்னும் பலர்)அவர்களை நினைவுகூர்ந்து அவர்கள் விட்டுசென்ற இலட்சியத்தை முன்னெடுப்பது அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி மரியாதை கெளரப்படுத்தலே. இவர்கள் தங்களுக்கு ஒரு கோவிலையோ ரசிகர் மன்றத்தையோ எதிர்பார்கவில்லை. ரஞ்சன்; மற்றவர்கள் அலட்சியப்படுத்தவில்லை என புரிந்துகொள்வது இனி உங்களுக்கு கஷ்ரமாக இருக்கும் என நினைக்கவில்லை.

    Reply
  • msri
    msri

    நுர்று மலர்கள் மலரட்டும் ஆயிரம் ககருத்துக்கள் முட்டி மோதட்டும்: இக்கோட்பாட்டில் கலைச்செல்வன் கூடிய நம்பிக்கை கொணடவர்! இப்போக்கிலேயே உயிர்நிழலையும் வெளிக்கொணர்நதார்! அவருக்கு எதிரிகள்-என இருந்தவர்களை> அவர் எதிரியாகப் பார்பதில்லை! அதேநேரம் தான் வரிததுக்கொண்ட பாதையில் உறுதியாக இருந்து>அவர்களின் நல்ல அம்சங்களை அதற்கு சாதமாக்கி: நல்லது அல்லாதவற்றிற்காக அர்த்தத்தோடு போராடுவார்! எதிலும் ஐக்கியமுன்னணிக் கண்ணோட்டமுடையவர்! அது புலம்பெயர் வாழ்வில்>உன் மறைவோடு அற்றுப்போய்விட்டது என்பேன்! உன்னை வருடமொருமுறையல்ல> ஊன்னால் ஈர்க்கப்பட்ட எம் எல்லோர்க்கும் ஏதொ ஓர் வகையில் நாளாந்தம் எம் நினைவலைகளில் வந்து செல்வாய்! நீ மறைந்திருக்லாம்!ஆனால் நீ எம் நினைவலைகளில் இருந்து இன்னும் மறையவில்லை!

    Reply