கொழும்பு உள்ளூராட்சி சபையில் தமிழ்ப் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும் !
கொழும்பு தமிழர்களின் நீண்ட கால கோரிக்கைக்கையான தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தொடர்பில் சுமந்திரனிடம் சிறப்பு செயல்த்திட்டம் உள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி. இரத்தினவடிவேல் தெரிவித்தார்.
வருகிற உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இவ் விடயம் குறித்து எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த போது, தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.