தலைவர் பிரபாகரனை கிட்லருக்கு நிகராக உவமித்த சட்டத்தரணி வைஷ்ணவியின் முட்டாள்தனம் !
தமிழர்களுடைய தலைவர் பெரியாரா? பிரபாகரனா? என்ற வாதமே குதர்க்கமானது. இருவருமே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த தலைவர்கள். பெரியார் தமிழ்நாட்டில் சமூகத்தில் நிலவிய மூடத்தனங்களை கண்டித்து சமூக நீதிக்காக போராடிய தலைவர். மற்றையவர் இலங்கையில் தமிழ் மக்கள் தமது மரபுவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தலைவர்.
உலகமெங்கும் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களும் தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என ஏற்றுக் கொள்ளட்டும். இதற்கிடையில் பெரியார் எங்கே வந்தார். பெரியார் ஒரு சமூக நீதிப்போராளி. பிரபாகரன் ஒரு அரசியல்ப் போராளி. சீமான் போன்ற வங்குரோத்து, இனத் தூய்மை பேசும் வலதுசாரி பாசிச அரசியலை முன்னெடுக்கும் ஒரு போலியை அடையாளம் காண முடியாதளவிற்கு இலங்கையிலும் சரி புலத்திலும் சர் ஈழத்தமிழர்கள் அறிவிலிகளாக உள்ளனர் என்பது தான் வேதனை.
சட்டத்தரணி என்று கூறிக் கொள்ளும் வைஷ்ணவி சமீபத்தில் மெய்வெளி எனும் யுரீயூப் தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் அவர் உளறிய கருத்துக்கள் அபத்தம். “சட்டத்தின் முன் சகலரும் சமம்’’ என்ற அடிப்படையை கூட விளங்கிக் கொள்ளாத சட்டத்தரணியாக உள்ளார் என்பதே கவலைக்குரியதே.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறோ, உலக வரலாறோ சரியாகத் தெரியாத ஒரு சட்டத்தரணியாக வைஷ்ணவி விளங்குகிறார். ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி உளறியதை விட ஜேர்மனியையும் கிட்லரையும் பற்றி உதிர்த்த கருத்துக்கள் மூடத்தனத்தின் உச்சம். கிட்லர் கொலகோஸ்ட் என்றழைக்கப்படும் 11 இலட்சம் யுதர்களை இனப்படுகொலை செய்த கொலையாளி. அவர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான ரோமா மற்றும் சிந்தி (ஜிப்ஸிக்கள்) என அழைக்கப்படும் நாடோடி மக்கள், தன்னுடைய சொந்த இனமான ஜேர்மனிய இனத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆயிரக்கணக்கான போர்க்கைதிகள் என பலரையும் படுகொலை செய்த ஒரு சர்வாதிகாரி. கிட்லரை இன விடுதலைப் போராளி என தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டு பேசும் சட்டத்தரணி வைஷ்ணவி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் புறந்தள்ளப்பட வேண்டிய நபர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக கருத்துரைக்கும் மற்றும் வக்காலத்து வாங்கும் உரிமையை அந்த அமைப்பு யாரிடமும் கையளிக்க வில்லை. பாலியல் துஸ்பிரயோகி சீமானின் வளத்தளத்தை பின்பற்றும்
சேலை கட்டி, பூவும் பொட்டும் வைத்தால் தான் தமிழ் அடையாளத்தை பேணுவதாக வைஷ்ணவி காட்டிக் கொள்ள முற்பாடுகிறார். ஆடை மற்றும் ஆபரணம் அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் பொதுவெளியில் ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனை கிட்லருக்கு நிகராக ஒப்பிட்டு சட்டத்தரணி பிரச்சாரம் செய்வதை ஈழத்தமிழர்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள்.
ஜேர்மனியர்கள் கிட்லர் என்ற ஒரு சர்வாதிகாரியால் உலக சமுதாயத்தில் தலைகுனிந்து நின்றார்கள். கிட்லரின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கோடிக்காண இழப்பீடுகள் கட்டினார்கள். தங்களுடைய சந்ததியினருக்கு கிட்லரின் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடூரங்களை பாடசாலைகளில் வரலாறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடேல்ப்ஸ் கிட்லர் என்ற பெயரை வைப்பதே தடைசெய்யப்பட்டுள்ளது.
வைஷ்ணவிக்கு கிட்லர் தலைவராக இருக்கும் பெரியாரோ அல்லது பிரபாகரனோ தலைவராக இருக்க முடியாது. வைஷ்ணவி என்ற பெண்மணி ஒரு தொழில் முறை சட்டத்தரணி. ஈழத்தமிழர்களின் பிரதிநிதி இல்லை. அவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்புக்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு உரிமை உண்டு. அதேசமயம் மக்களால் தெரிந்தெடுக்கப்படாத ஒரு நபர் ஒட்டுமொத்த இனம் சார்பில் தன்னைத்தானே பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு கருத்துக்களை முன்வைக்க முடியாது.
விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு பெரியார் மற்றும் திராவிடம் குறித்த சொன்ன கருத்துக்களே இறுதியானவை. ஈழத்திற்கு சீமான் அழைக்கப்பட்ட போது பெரியார் பேரனாக வந்து சென்றார். சீமான் என்ற இயக்குநர் நாம் தமிழர் கட்சியாக பரிணமிக்கும் வரை கறுப்புச் சட்டை பெரியார் பேரனாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியும். சீமான் முப்பாட்டன் முருக பக்தனாக அவதாரம் எடுத்த போது தேசியத் தலைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. ஆகவே வைஷ்ணவி சீமானை கூட தனது ஆதர்ஸ கதாநாயகனாக தலைவராக வரித்துக் கொள்ளட்டும்.
பெரியார் தலைவரா இல்லையா என சீமானுக்கு தேர்தலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிய வைப்பார்கள். இறுதியாக நடந்த ஈரோடு தேர்தலில் சீமான் கட்டுப்பணம் கூட திருப்ப எடுக்கவில்லை . குறைந்தபட்சம் வைஷ்ணவிக்கு தேர்தல் புரிந்தால் நல்லது.