: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் ! 

: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் !

பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீது பாய்ந்தார் அமைச்சர் சந்திரசேகர். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நேற்று மார்ச் 5இல் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அமைச்சர் சந்திரசேகர் பொறுமையை இழந்து மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பா உ அர்ச்சுனா எழுந்து குறுக்கிட்டு குறுக்கிட்டு கத்தியதைத் தொடர்ந்தே அமைச்சர் சந்திரசேகர் கொதித்தெழுந்தார்.

வடக்கில் போதைப்பொருட்கள் மிக முக்கியமான பிரச்சினையாகி பல்வேறு சமூகப் பிறள்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு சமூகக் கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றது. இது பற்றி இதுவரை மௌனமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு வந்ததும் அது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தன்னுடைய தனிநபர் பிரேரணையில் பா உ ரஜீவன் போதைப் பொருட்களே வன்முறைகளுக்கும் வாள் வெட்டுகளுக்கும் இட்டுச்செல்வதைச் சுட்டிக்காட்டினார். சமூகப் பிலதிநிதிககள் அடங்கிய குழக்களை அமைத்து முப்படையினரும் சேர்ந்து இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய பா உ அர்ச்சுனா ஐந்து மாதத்திற்கு முன்னர் ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியே வடக்கில் உள்ள போதைப் பொருட் பாவனைக்கு பொறுப்பு என்ற வகையில் எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை கத்திக் கத்தி முன்வைத்தார். அதன்போது யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையில் குறிப்பிட்ட மருதுவர் கேதீஸ்வரன் மருந்தகம் ஊடாக போதைப்பொருள் விற்பனை செய்ததாகவும், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அவரின் மகன் ஊழலில் ஈடுபட்டதாகவும் வல்வெட்டித்துறையில் வன்முறையில் ஈடுபட்டவர் தேசிய மக்கள் சக்தியில் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அதற்கு தேசிய மக்கள் சக்தியே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி இளம்செழியனை அவர் ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பொறுப்பான பதவிகள் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

யாழ் மாவட்டத்தையும் வடக்கு கிழக்கையும் பாதிக்கின்ற முக்கியமான விவாதத்தில் பா உ அர்ச்சுனா ஆரோக்கியமாக விவாதத்தை நகர்த்தாமல் காழ்ப்புணர்வைக் கொட்டி தன்னுடைய சமூக வலைப்பதிளை கிளு கிளுப்பாக வைத்திருக்கும் வகையில் நடந்து கொண்டமை பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் கிணற்றுத் தவளைபோல் தொடர்ந்தும் ஓரெ விடயத்தை கத்திக் கத்தி வருகின்றாரேயொழிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொள்கின்றார் இல்லை என பாராளுமன்ற விவாதங்களை உன்னிப்பாக பார்ப்பவர்கள் கருதுகின்றனர். மேலும் விவாதங்கள் நடக்கின்ற போது கத்திக் குளறுவது பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகின்ற போது ஆரோக்கியமான விவாதங்களுடாக தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும் தெருப்பொறுக்கி போல் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா நடந்துகொள்கின்றார் என்ற அபிப்பிராயம் ஏனை சமூக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *