தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்கு பேக் ஐடி: பா உ அர்ச்சுனாவுக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகள் ஒன்றே ! எங்கோ உதைக்கின்றது !
தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்ளுக்காக பேக் ஐடியைப் பாவிப்பதும் தனிநபர்களில் இருந்து ஏகாதிபத்தியங்கள் வரை மேற்கொள்கின்ற சில்லறை அரசியல். இவ்வாறான மோசடிகள் தொழில்நுட்பம் வளராத காலகட்டங்களிலும் பார்க்க தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய காலகட்டங்களில் இது மிக மோசமானதாக உள்ளது. இந்த பேக் ஐடி அரசியல், தற்போது தமிழ் மக்கள் மத்தியில் மிகத் தீவிரமடைந்துள்ளது.
அண்மையில் முளைத்துள்ள ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற முகநூல் தளம் ஒரு முகமூடிக் கூட்டம். பா உ அர்ச்சுனாவுக்கும் இந்த முகமூடி அணிந்த ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகளிலும் செயற்பாட்டிலும் ஒரே ஒற்றுமை. இந்த மூகமூடி அணிந்தவரின் முகமாக பா உ அர்ச்சுனா செயற்படுகின்றார். அண்மையில் குறிவைத்து அடிக்கப்பட்டவர்கள்: அமைச்சர் சந்திரசேகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, சட்டத்தரணி சுவஸ்திகா அருளலிங்கம், ஊடகவியலாளர் சங்கவி, சாதாரண பெண் சாளினி என்று தொடர்கின்றது.
பா உ உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ் வின் மற்றும் தமிழ் வின், ஜேவிபி நியூஸ் எனடபவற்றை இயக்கி தன்னுடைய அரசியல் விரோதிகளையும் தனக்கு எதிரானவர்களையும் தாக்கி இனவிரோதத்தையும் கூர்மைப்படுத்தி வந்தார். இந்த இணையத் தளங்கள் அன்று பா உ சிவஞானம் சிறிதரனின் சகோதரனால் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழ் வின் – லங்காசிறியை ஐபிசி பாஸ்கரன் பாங்கிவிட்டார். ஜேவிபி நியுஸ் இன்றைக்கும் பா உ சிறிதரனின் சகோதரனால் இயக்கப்படுகின்றது. இதனை ஜேவிபி நடத்தவில்லை. ஜேவிபிக்கு தங்களுடைய பெயரில் இவ்வாறு ஒரு இணையத்தளம் இருப்பது தெரியுமோ தெரியாது.
ஆனால் பா உ எஸ் சிறிதரன் ஜேவிபிநியூஸிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கின்றார். அதே பாணியில் பா உ அர்ச்சுனாவும் தனக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று சத்தியம் பண்ணுகிறார். தேசியத் தலைவரின் மீது சத்தியம் பண்ணிச் சொல்கின்றார். ஆனால் பா உ அர்ச்சுனாவின் எதிரிகளும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் கதிரிகளும் ஒன்றாகவே இருப்பது தான் ஆச்சரியம்.
ரிக்ரொக்கில் பொழுது போக்காகா கலாய்க்கின்ற ஒரு பல்கலைக்கழகத்திலும் ஒரு டிகிரியும் எடுக்காத ஒரு இளம் பெண் தான் கிளிநொச்சி இராமநாதபுரத்தைச் சேர்ந்த சாளினி. மற்றுமொரு பெண் ஊடகவியலாளரான சங்கவி. அவரும் ஒரு பல்கலைக்கழகத்திலும் ஒரு டிகிரியும் எடுக்காதவர் என பா உ அர்ச்சுனா கண்டுபிடித்திருக்கிறார். தங்களுடைய கிலுகிலுப்புக்காக தங்கள் சமூகவலைத்தள பார்வையை அதிகரிக்க, இந்த ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் பா உ அர்ச்சுனாவும் இப்பெண்களை விபச்சாரிகள் என்று கூவி வருகின்றனர். பாராளுமன்றத்திலும் சாளினியை விபச்சாரி; என்று முழங்கியுள்ளார் மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டித்து பட்டம் பெற்றதாகக் கூறும் அர்ச்சுனா. அதற்கு லண்டன் தமிழ் அடியான் ஜால்ரா அடித்து வருகின்றார்.
பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவை சொந்தவாந்தியை உண்ணும் நாய் என்று வர்ணித்த அமைச்சர் சந்திரசேகரனை ஊழல் ஒழிப்பு அணி வன்னி குறிவைத்தது. அதற்கிடையே பாதிக்கப்பட்ட சாளினி, சங்கவிக்காக குரல் கொடுத்த சுவாஸ்திகா அருளலிங்கத்தை பெட்டை நாய் என்று குதறியிருக்கின்றார் அர்ச்சுனா.
இந்த தமிழ் தலிபான்களின் அடுத்த இலக்கு எந்த அப்பாவிப் பெண்ணாக இருக்குமோ தெரியவில்லை. இப்பெண்களுக்காக குரல்கொடுப்பவர்கள் அடுத்த இலக்காக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.