சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கிவிட்டனர் புலிகள்: இலங்கை ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஇலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார்.

எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில், ஒரு இறுதி நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  முந்தைய சமரச முயற்சிகளை விடுதலைப் புலிகள் நகைப்புக்கிடமானவையாக மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கும் வகையில், மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தம் ஒன்று அமலுக்கு வரவேண்டும் என்று கோரும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த கருத்து வந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • palli
    palli

    இல்லை என்று சொல்ல முடியாதுதான் ஆனால் அதைவிட மோசமாக தாங்கள் சர்வதேசத்தை கோமாளிதனமாக டான்ஸ் குடும்பத்தனுடன் ஆடிக்கொண்டு அவர்களை அப்படி சொல்லுவது: தமிழகத்து &மாமியார் மருமகள் சச்சாரவுபோல் பல்லிக்கு படுவது நியாயம்தானே;

    Reply
  • santhanam
    santhanam

    வட்டுகோட்டைதீர்மானம் துரோகியாகசுடப்பட்டவர்களின் தீர்மானம் நோர்வே புலிகளும் கி பி அரவிந்தனும் தலையில் வைத்து ஆடுகிறார்கள் அதில் என்ன அப்படியுள்ளது தெரிந்தவர்கள் எழுதவும்

    Reply
  • thevi
    thevi

    புலிகளும் என்ன தான் செய்வாகள். இடம் வலம் தெரியாமல் நோர்வேயின் வலையில் விழுந்து கடல்முழுதும் தனக்கென நோர்வே தந்திரம் செய்ய எல்லாம் குழம்பி விட்டது.

    Reply
  • மாயா
    மாயா

    santhanam,
    அரவிந்தன் அடுத்தவர்களது குறும்படங்களை போட்டுக் காட்டி பேர் வாங்கினார். அந்த குறும்பட பயணத்தில் தனக்கு விளம்பரம் தேட TTNக்குள் போய் , புலிகளுக்குள் புதைந்து போனார். இவரும் புலி வாலை மெள்ள விட்டுட்டு வெகு கெதியா சிரித்து மழுப்பத்தான் போறார். இவர்கள் நல்ல மேடைப் பேச்சாளர்கள்? சினிமா தெரியாத சினிமாக்காரர்கள் வரிசையில் கி பி அரவிந்தனும் ஒருவர்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வட்டுகோட்டை தீர்மானம். புலம்பெயர்ந்த தொழில்- வணிகர்களின் முன்னெடுப்பு. இது இரண்டாம் கட்ட நடவடிக்கை. நடப்பு வரலாற்றை தெளிவாக புரிந்து கொண்டவர்கள். இனிமேல் காலத்தில் புலிகளின் பெயரில் பணம்பண்ன முடியாது என்பதை தெளிகாக புரிந்து கொண்டவர்கள். பணங்கழியில் உடுப்பு தோய்ததையோ தவிட்டைக் கரைத்து குடித்துக் கொண்டிருக்கிற தமிழ்மக்களைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலை கொள்ளாதவர்கள். தமிழ்மக்களின் கடந்தகால துன்பங்களைப் பற்றியோ ஒரு இளம்தலைமுறை அழித்தொழிவர்க்கு தேசியத்தலைவர் பட்டம் சூட்டி அதில் சுகபோகங்கள கண்டவர்கள். இவர் தனது அந்திமகாலத்தை அடையும் போது முற்றாக வலுவிழக்கும் போது…. வேறு ஒரு பெயரில் புலம்பெயர் அப்பாவிகளின் முன் உண்டியலுடன் தரிசனம் கொடுப்பதற்கும் புலிகளின் பெயரில்லுள்ள சொத்துக்களை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையே இந்த இரண்டாம் கட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் சந்தேகம் வேண்டாம்.

    Reply
  • msri
    msri

    வட்டுக்கோட்டைத் தீர்மானம்: சரிந்துகொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் அரசியலை தூக்கி நிமித்த (கூட்டணியாக்கப்பட்டு) வைக்கப்பட்ட தேர்தல்கோசமே! வட்டுக்கோட்டை தீர்மானம் செல்வநாயகத்திற்கே விருப்பம் இல்லை! நெருக்குதல்-நிர்ப்பந்தங்கள் மூலம்>ஏற்க வைக்கப்பட்டது!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பல்லி, டான்ஸ் கூத்தென்றதும் நினைவுக்கு வந்தது.
    பனை மரத்தில வவ்வாலா புலிகளுக்கே சவாலா

    இந்த அடி வாங்கியும் இந்த ஆட்டம் இன்னும் தொடர்கிறது.
    புலிகளின் ஒரு அடிக்கும் ஒரு கொலைக்கும் புலத்தில எப்படி துள்ளல் துள்ளினார்கள்? அவற்றை எவராலும் மறக்க முடியாது?

    இவ்வளவு வென்றும் அரசு தன்னடக்கத்துடனேயே தன் வெற்றிக் களிப்பை அமுக்கி வாசிக்கிறது. இவற்றை புலிகளும் அதன் ஆதரவுகளும் ஒன்றுக்கு 100 முறை சிந்திக்க வேண்டும்.

    இதே நிலை உங்களுடையதென்றால் இன்று யாரும் இருக்கவே ஏலாது? பொது மக்கள் மேல் வேதனையாகயிருந்தாலும் இவை மனக்கண் முன் வந்து மறைவதை மறக்க முடியவில்லை.

    Reply