இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் 60 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தழிழ்த் தலைவரின் இந்தக் கூற்று எமது பிரச்சனை தொடர்பாக வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, மிகமுக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றியறிதலை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
இந்தநிலையில் சர்வதேச அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுகின்றது.
மாயா
செல்வி தமிழீழத்தை பெற்றுக் கொடுகப் போறா ஆவென்று இருங்கோ?
chandran.raja
தம்பியை நம்பி வாழ்நாளின் அரைவாசிக் காலம் முடிவடைந்து விட்டது.இனி செல்வியையும் நம்பி மிகுதிக்காலத்தையும் வீணாக கழிக்கப் போகிறீர்களா?
இந்தியாவையும் இந்தியாவின் பூகோளநிலையில் இலங்கையின் அங்கத்தைப் பற்றியும் அறியாதவர்களே….! செல்வியின் நோக்கம் எல்லாம் தமிழகத்திற்கு எப்படியாவது முதல்வராக வருவது பற்றியே. இது தேர்தல் வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல் சதாரண மக்களுக்கும் புரிந்து கொள்ளக்கூடியதே.இந்தியாவைப் பொறுத்த வரை எந்த அரசு வந்தாலும் பாதுகாப்புக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் எந்த அரசையும் அனுமதிக்க போவதில்லை. அது சிங்கள அரசாக இருந்தாலும் சரி தான். இதில் ஈழம்…நாடு பிரிதல் பற்றி கதைப்பது வேடிக்கைக்குரிய விஷயமே. தமிழ்ஈழம் விரும்பிகள் தமது சொந்தமண்டையை தூரச்செலுத்தி “ஐக்கிய இலங்கைக்குள்”தமிழ்மக்களுக்கு பயன்யுள்ள தீர்வைப் பெற்றுக்கொள் முடியுமா? என சிந்திப்பதே சிறந்தது.
SUDA
பொறுத்திருந்து பாருங்கோ! செல்வி முதல்வர் ஆசனத்தில அமர்ந்ததும் என்ன ஆகுமென்று.
ஆற்றைக் கடக்கும் வரை நீயும்’ நானும் அண்ணன் தம்பி கடந்து விட்டால் நீ யாரோ… நான் யாரோ…. அதுதான் இது.