புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: எச்சரிக்கை

indo-lanka.jpgதாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • நண்பன்
    நண்பன்

    புலிகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதற்கு முன் தாங்களே புலன் விசாரணை நடத்தி எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

    வன்னிப் போர் முடிவுக்கு வரும் போது புலத்தில ஏதாவது புலிகளால் நடக்கும் என எமது 0 அமைப்பு அனைவரையும் எச்சரிக்கிறது.

    Reply
  • BC
    BC

    புலிகள் ஏதோ தங்கள் கைவரிசையை வெளிநாடுகளில் காட்ட போகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

    Reply
  • மாயா
    மாயா

    புலத்திலும் நாறப் போறாங்க. சனி பகவான் அனுக்கிரகம் நல்லாத்தான் பாலிக்கிது. சனி திசை தலைவருக்கு மட்டும் என்றுதான் சொன்னாங்கள். தலையில இருந்து வால்வரையும் ஆட்டத்தான் போகுது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    நேற்று இராணுவ பகுதிக்கு வந்த மக்கள் பிரபாகரனை யுத்த சூன்ய பகுதியில் கண்டதாக தெரிவித்துள்ளார்கள். முடிவு புலத்தில் பலமாக எதிரொலிக்கும்.

    பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை காப்பது உங்கள் கைகளில் தங்கியுள்ளது.

    லண்டன் போராட்டத்துக்கு வந்த இளசுகளுக்கு கொக்கா கோலாவில் விஸ்கி கலந்து கொடுத்து விட்டு வேறு இயக்கங்களை சாட்டி அறிக்கை விட்டது மாதிரி, நாளை உங்கள் குழந்தைகளை வைத்து ஏதாவது செய்வார்கள்.

    இன வெறியும் , மது வெறியும் சேர்ந்தால் என்ன நடக்கும்? பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை காக்கும் பொறுப்பு உங்களுடையதே….

    நாம் வாழும் நாடோ அல்லது போலீசாரோ அதற்கு பொறுப்பு இல்லை. இது குறித்து கருத்துகளை பகிருங்கள்.

    Reply