லைக்கா செக்ஸ் சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு !
லைக்கா – செக்ஸ்சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட, புலிக்கள் முரளிகிருஷ்ணனின் பாலியல்துஸ்பிரயோகம் பற்றிய வழக்கு நேற்று திக்கள் கிழமை முதல் ஏழு நாட்களுக்கு விசாரணைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் கிங்ஸ்பறி என்ற இடத்தில் ஆலயத்தை உருவாக்கி பக்தர்களைக் கவர்ந்து இழுத்துள்ள, இந்த செக்ஸ் சாமியார், மீதான வழக்கை பிரித்தானிய மெற்றோபொலிட்டன் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
பா உ அர்ச்சுனா உள்ளிட்டவர்கள் தமிழ் பெண்களை இலங்கையில் கேவலப்படுத்தி அவர்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்குவதுடன் பெண்களின் நிர்வாணப்படங்களையும் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இவ்வாறான ஒரு சமூகம் பிரித்தானியாவுக்கும் வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த போதும் ஆணாதிக்க சிந்தனைமுறையிலிருந்து இன்னமும் விடுபடாமலேயே உள்ளது. பிரித்தானியாவிலும் தமிழ் ஆண்கள் சிலர், சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக தண்டணை பெற்றுள்ளனர். அவ்வாறு தண்டணை பெற்ற ஒருவருக்கு, அவரை விரைவில் விடுதலை செய்யக் கோரி நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் நற்சான்றிதழ் வழங்கியதும் பிரித்தானியத் தமிழர்கள் மத்தியில் தான் நிகழ்ந்தது.
அர்ச்சுனாவும் அவருக்குத் துணையாக பெண்களின் நிர்வாணத்தை தரவேற்றும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி மற்றும் அர்ச்சுனா அடியான்கள் தான் ஆணாதிக்க வாதிகள் அல்ல. காமுகன் பிரேமானந்தாவை வணங்கும் விக்கினேஸ்வரனும் அவருடைய தலைமையில் அரசியல் செய்யும் கூட்டமும் இந்த ஆணாதிக்கத்துள் புதைந்து கிடப்பவர்கள் தான். இவர்கள் ”நான் என்ன குச்சிகட்டியிருந்த 16 வயது பெண்ணையா கொண்டே செய்தேன்” என்று கேட்கின்ற சீமானைத் தலைவராகக் கொண்டுள்ளனர்.
செக்ஸ் சாமியார் என்று குற்றம்சாட்டப்படும் இவரைக் குப்பிடுவதற்கும் பணத்தை வாரி இறைப்பதற்கும் பெரும் கூட்டம் லண்டனில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்று லைக்கா குருசாமி பிரேம், புலிக்கள் முரளிகிருஷ்ணனின் பக்தர். தனக்கு ஏற்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்தியதால் தனக்கு இந்தப் பக்தி ஏற்பட்டதாக பிரேம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.
புலிக்கள் முரளிகிருஷ்ணன் நீண்டகாலம் தடுப்பிலிருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரை லைக்கா பிரேமே பிணை எடுத்ததாகவும், இந்த வழக்குக்கான நிதியை இவரே வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. இது பற்றி லைக்கா பிரேமிடம் கேட்ட போது அவர் அதனை மறுத்திருந்தார்.
லண்டன் வூட்கிரீன் கிறவுன் நீதிமன்றில் இடம்பெறும் இவ்வழக்கு அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடரும். பாதிக்கப்பட்ட பெண்ணிணுடைய விபரங்களை வெளியிட நீதிமன்றம் கண்டிப்பான தடையை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
லண்டன் தமிழ் சமூககம் நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளாகி உள்ள இவ்வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இது போன்ற வழக்குகள் நீதமன்றம் வந்து தண்டனைகள் வழங்கப்படுவதனால் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மட்டுப்படுத்தப்படும் என பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கலைப் பீடாதிபதி உட்பட பலர் பாலியல் லஞ்சம் கோருகின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு ள்ளது. பேராசிரியர் ரி கணேசலிங்கத்திற்கு எதிராக பாலியல் வன்புணர்வு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இவர்கள் இன்றும் தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகளாக வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.