பிரதமர் ஹரினி அமரசூரிய பிரான்ஸ்சில் சுற்றுப்பயணம்
ஏப்பிரல் 1 இல் பிரான்சில் நடைபெறவுள்ள யுனஸ்கோ சர்வதேச நிபுணர் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்கிறார். அவ் அமர்வில் இலங்கையின் புனித நகரான அநுராதபுரத்தின் பாரம்பரியம் , அதனுடைய வாழ்க்கை மற்றும் அதனைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறை என்ற தொனிப்பொருளில் உரையாற்றுகிறார். இவ் விஜயத்தின் போது பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.