தவறு செய்யும் அரச ஊழியர்களின் வேலை பறிபோகும் எச்சரிக்கிறார் ஜனாதிபதி அநுர
புத்தளை நகரில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தகாலங்களைப் போலன்றி லஞ்சம் கொடுக்காமல் மக்கள் அலுவல்களை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கப் பணத்தை திருடாத மற்றும் வீணாக்காத அரசாங்கம் ஒன்றை 76 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைத்துள்ளோம். முன்பு வீதி போடும் போது அமைச்சரின் வீட்டுக்குப் பணம் சென்றது. இனிமேல் அவ்வாறு நடக்க முடியாது. அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒரு சில அரச ஊழியர்கள் சிறு சிறு தவறுகள் செய்கிறார்கள் எனத் தகவல்கள் வருகின்றன. அப்படி செய்தால் கஷ்டப்பட்டு பெற்ற அரச வேலைகள் பறிபோகலாம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
சுங்கத்துறையில் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அத்துறையிலிருந்து இன்னும் இரண்டு மூன்று பேர் வெளியேறலாம் என்றார். மேலும் ஜனாதிபதி அநுர அதேமாதிரி பொலிஸ் துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்