லண்டன் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த செக்ஸ் சாமியாரின் வழக்கின் தீர்ப்பு !
தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட செக்ஸ் சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச தரப்பு சட்டத்தரணி ஏப்ரல் 1 செவ்வாய் கிழமை தன்னுடைய இறுதி வாதத்தை முன்வைத்து பாதிக்கப்பட்;ட பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திடம் நியாயத்தைக் கோரினார்.
ஏப்ரல் 2இல் பாலியல் வன்புணர்வு மற்றும் நான்கு பாலியல் தாக்குதல்கள் குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனின் சட்டத்தரணி தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தங்கள் இறுதிவாதத்தை முன்வைத்தனர்.
புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நிதிமோசடிக் குற்றச்சாட்டை அரசதரப்பு முன்னரே கைவிட்டிருந்தது. தற்போது பாலியல் வன்புணர்வு மற்றும் நான்கு பாலியல் தாக்குதல்கள் பற்றிய விடயங்களிலேயே தீர்பு அளிக்கப்பட உள்ளது.
200,000க்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற லண்டனில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. ஆலயங்களோடு தொடர்புடையவர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சில ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் லண்டன் தமிழர்கள் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர்.