இலஞ்ச ஊழல் மோசடி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறை !
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித், அவரின் மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்தத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஏப்ரல் முதலாம் திகதி விதித்து இருந்தது.
2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ். எம் ரஞ்சித் சமரகோன் வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக செயல்பட்ட போது அவரின் தனிப்பட்ட செயலாளராக சாந்தி சந்திரசேன பணி யாற்றினர். லஞ்சம் ஊழல் பெற்றது, மற்றும் அதற்கு அரச அதிகாரிகளைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களிலேயே அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.